- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval18/05/2025 தேய்பிறை சஷ்டி விரதம்

18/05/2025 தேய்பிறை சஷ்டி விரதம்

- Advertisement -

நாளை 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து பக்தர்கள் வழிபட்டு குடும்ப நலனை அதிகரிப்பார்கள். தேய்பிறை சஷ்டி விரதத்துடன், திருவோண விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. திருவோண நட்சத்திரம் மற்றும் உத்திராட நட்சத்திரத்துடன் கூடிவரும் இந்த நாளில் முருகனை குடும்ப நலனுக்காக எப்படி வழிபடுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

தேய்பிறை சஷ்டி விரதம் கடைபிடிப்பவர்கள் இந்த நாளில் காலையிலேயே எழுந்து நீராடி சுத்த பத்தமாக மஞ்சள் அல்லது வெள்ளை நிற உடைகளை உடுத்திக் கொண்டு பூஜை அறையில் முருகப்பெருமானை அலங்கரித்து தயார் செய்து வைத்து, விரதம் இருந்து வழிபட வேண்டும். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

- Advertisement -

தேய்பிறை சஷ்டி விரதம் கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் சாந்தியும், அமைதியும் நிலவும். செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டுமல்லாமல் நோய் நொடிகளையும் தீர்க்கக் கூடியது இவ்விரதம்! எதிரிகளின் தொல்லை நீங்கவும், மன நிம்மதி கிடைக்கவும், ஆண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களும் இந்த தேய்பிறை சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம். முருகனை அலங்காரம் செய்து அவருடைய வேல் வைத்திருந்தால், முறையே நல்ல தண்ணீர், பன்னீர், பால், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யலாம்.

தேய்பிறை சஷ்டி விரதத்தில் அக்கார வடிசல் நைவேத்தியம் படைப்பது ரொம்பவும் விசேஷமானது. பாசிப்பருப்பு, பால், நெய், வெல்லம் சேர்த்து செய்யப்பட்டுள்ள இந்த அக்காரவடிசல் முருகனுக்கு ரொம்பவும் பிடித்தமான உணவுப் பொருளாகும். குடும்ப நன்மை கருதி குடும்பப் பெண்கள், இந்த தேய்பிறை சஷ்டி விரதத்தை அதிகாலையிலேயே கடைபிடித்து முருகனை வழிபடலாம். இந்த நாளில் அதிகம் பேசாமல், முருகனுடைய மந்திரங்கள், சஷ்டி கவசம், வேல்மாறல், சுப்பிரமணிய புஜங்கம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

- Advertisement -

“ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை இந்நாளில் உச்சரிக்க முருகனுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுத்தமாக நைவேத்தியம் தயார் செய்து படைத்து, விரதம் இருந்து முருகனை பூஜிக்க வேண்டும். வெற்றிலை தீபம் போடுவது, இந்த நாளில் ரொம்பவும் விசேஷமானது. கடன் தொல்லைகள் நீங்கவும், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் மறையவும், ஆறு வெற்றிலைகளை தாம்பாளத்தில் விரித்து, ஒவ்வொரு இலைகளிலும் ஒவ்வொரு அகல் விளக்கினை வைத்து சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். சுற்றிலும் மலர்களை வைத்து அலங்காரம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
சனிவார தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்

வெற்றிலை தீபம் போடுவதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் தீரும். தொழில் ரீதியான தடைகள் அகன்று, எதிரிகளின் தொல்லை ஒழியும். மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அர்ச்சனை, அலங்காரங்களில் கலந்து கொண்டு தரிசனம் செய்துவிட்டு, முருகனை பிரார்த்தனை செய்துவிட்டு வாருங்கள். நாளை தேய்பிறை சஷ்டி, திருவோண விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. திருவோணம் முடிந்து, இந்த நாளில் உத்திராடம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது, இருப்பினும் திருவோண விரதம் கடைபிடிக்கப்படுகிறது. தேய்பிறை சஷ்டியுடன் திருவோண விரதத்தையும் கடைபிடித்து குடும்பத்தில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் நீடித்து நிலைக்க செய்யுங்கள்.

சற்று முன்