- Advertisement -

தடையில்லா செல்வம் பெற கோஜாகரி பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய நாளில் சந்திரனின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று நிலவு பெரியதாக தெரியும் என்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி அன்று இரவு மகாலட்சுமி தாயார் அனைவரின் இல்லத்திற்கும் சென்று அருள் பாலிப்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நாம் செய்ய வேண்டிய மகாலட்சுமி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோஜாகரி பௌர்ணமி வழிபாடு

சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பௌர்ணமி நாளன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ வளத்தில் எந்தவித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியை நாம் கோஜாகரி பௌர்ணமி என்று கூறுகிறோம். இந்த நாளில் நாம் மகாலட்சுமி தாயாரை மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த மகாலட்சுமி வழிபாட்டை இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சோலி இருக்கும் பட்சத்தில் அந்த சோலியால் சத்தத்தை எழுப்ப வேண்டும். சந்தன ஊதுபத்தியை காட்டி மனம் அதிகமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக பால், ஜவ்வரிசி பாயாசம் போன்றவற்றை வைக்க வேண்டும்.

அவ்வாறு வைக்கும் பொழுது அதில் சிறிதளவு குங்குமை பூவை சேர்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பு. ஜவ்வரிசி பாயாசம் தயார் செய்யும் போது அதில் சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டு சேர்க்கும் பொழுது சுக்கிர பகவானின் அருளையும் பெற முடியும். இப்படி நெய்வேத்தியம் வைத்து மகாலட்சுமி தாயாரின் அஷ்டகம், அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் போன்றவற்றை பாராயணம் செய்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருளை சந்திரனின் ஒளி படும்படி குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது வைத்திருந்து பிறகு அதை எடுத்து வந்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். இப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் இந்திர பகவானையும், இந்திர பகவானின் வாகனமாக திகழக்கூடிய ஐராவதத்தையும் நாம் சேர்த்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் தடையில்லா செல்வத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: ஆன்மீக அதிர்ஷ்ட பொருட்கள்

மற்ற பௌர்ணமி நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறோமோ இல்லையோ இந்த புரட்டாசி பௌர்ணமி நாளில் இரவில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் தடை இன்றி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -