பொதுவாகவே ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் என்பது திடீரென வரக்கூடியதாக இருக்கிறது. எப்போது யாருக்கு அதிர்ஷ்டம் வரும்? எப்போது யாருக்கு துரதிர்ஷ்டம் துரத்தும்? என்பது தெரியாது. சில பொருட்கள் நாம் நடந்து செல்லும் வழியில் கூட நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைக்கக்கூடும். இப்படியான சில பொருட்கள் ஆன்மிக ரீதியாக நமக்கு தரக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்னும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு பொருள் நாணயங்கள் மற்றும் பணம். பணம் அல்லது நாணயங்கள் கீழே கிடைத்தால் அது அதிர்ஷ்டமிக்கதாக சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் நம் காலடி தேடி வருகிறது. பணமோ அல்லது நாணயங்களோ கிடைத்தால் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். அதிலிருந்து சிறு தொகையை மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துங்கள்.
ஒரு ரூபாய் நாணயம் கிடைத்தால் வெற்றி மேல் வெற்றி வரப்போகிறது என்று அர்த்தம். நியூமராலஜி படி ஒன்று உங்களுக்கு வெற்றியை தரக்கூடியதாக எண்ணாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு கிடைக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒன்று இலக்க எண்கள் இருந்தால், இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பெரிய வெற்றியை கொடுக்க காத்திருக்கிறது என்று அர்த்தம். இந்த நோட்டை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக வேறு நோட்டை பயன்படுத்துங்கள். மூன்று அல்லது ஒன்பது இலக்க எண்கள் வந்தால் அந்த நோட்டை பத்திரப்படுத்தாதீர்கள். ஏதாவது ஒரு தர்ம காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இறகுகள் கிடைத்தால் அதுவும் பேரதிர்ஷ்டமாக சொல்லப்பட்டுள்ளது. வெள்ளை நிற இறகுகள் உங்களுக்கு அமைதியையும், வெற்றியையும் கொடுக்கக்கூடியது. இந்த பிரபஞ்சத்தின் மூலம் தேவ தூதர்கள் அல்லது நல்ல தேவதைகள் உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மயில் தோகை கிடைத்தால் முருகனுடைய அருள் கிடைப்பதாக அர்த்தம். அதுபோல சாம்பல் நிற இறகுகள் கிடைத்தால், சிவ அருள் உங்களுக்கு கட்டாயம் இருக்கும். சிவபெருமானுடைய பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரக்கூடிய இதய வடிவிலான இலைகள் காண நேர்ந்தால் அதுவும் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். நீங்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது துளசி இலைகளை காண நேர்ந்தால், அதிர்ஷ்டம் மிக்கதாக சொல்ல வேண்டும். கீழே சாவிகள் திடீரென கிடைத்தால், அதுவும் உங்கள் வாழ்க்கையை திறக்கப் போகும் அதிர்ஷ்ட சாவியாக எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக விடை கிடைக்காத கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போகிறது அல்லது நீண்ட நாட்களாக நீங்கள் தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்க்க இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சாவிகள் கிடைத்தால் முதலில் அது யாருடையதாக இருக்கும்? என்று சுற்றும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி யாருடையதாகவும் இல்லை என்றால், நீங்கள் அதனை எடுத்துக் கொண்டு வந்து பூஜை அறையில் சுத்தம் செய்து வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
இது போன்ற அதிர்ஷ்ட பொருட்கள் எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் கிடைப்பதில்லை. இது பிரபஞ்சம் மற்றும் ஆன்மீகம் உங்களுக்கு ஏதோ ஒன்றை எடுத்துரைக்கவும், வழி காட்டவும் செய்கிறது. முன்னோர்களுடைய அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம். முன்னோர்கள் உங்களுக்கு வழி துணையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். முன்பெல்லாம் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அல்லது நகைகளும் கூட அடிக்கடி கிடைக்கப்பெறும். ஆனால் இப்பொழுது ஒரு ரூபாயை கூட, நாம் கீழிருந்து பெற முடியவில்லை. அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்தால், அதனை தக்க வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நேர்மறை ஆற்றல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்.