- Advertisement -
- Advertisement -

ஒவ்வொருவரும் தன் வாழும் வாழ்நாளில் நல்ல செல்வ வளத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழத் தான் விரும்புவார்கள். இந்த இரண்டையும் அருளக் கூடிய அற்புதமான தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் சந்திர பகவானும். மகாலட்சுமி தாயார் ஆனது செல்வ வளத்தை வாரி வழங்கக் கூடியவர். அதே போல் சந்திர பகவான் ஆனவர் மனதை செம்மைப்படுத்தி நிம்மதியான முறையில் வாழ வைப்பவர்.

இந்த இரண்டு தெய்வங்களையும் வணங்கக் கூடிய அற்புதமான நாளாக இன்றைய தினம் திகழ்கிறது. வெள்ளிக்கிழமை அன்னையை வணங்க உகந்த நாள். அதே போல் மூன்றாம் பிறை சந்திர பகவானை வணங்க உகந்த நாள். இந்த மூன்றாம் பிறை வழிப்பாடானது சிவபெருமானின் அருளையும் நமக்கு பெற்று தரக் கூடியது. இத்தகைய அற்புதமான நாளில் நாம் செய்யக் கூடிய இந்த எளிய வழிபாடு நம்முடைய குடும்பத்தின் செல்வன் நலனையும் நிம்மதியும் அதிகரிக்கும். அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வ வளம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

இந்த வழிபாட்டை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்ளாக செய்வது சிறந்தது. அந்த நேரத்தில் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் 8 மணியிலிருந்து 9 மணி வரையிலான சுக்கிர ஹோரையில் செய்யுங்கள். ஆனால் இந்த வழிபாடு செய்யும் பொழுது சந்திர தரிசனத்தை பார்க்க வேண்டும்.

முதலில் வீட்டின் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சிறிய தட்டு கல் உப்பை பரப்பி அதன் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சித் திரி போட்டு தீபம் ஏற்றுகிறது அடுத்ததாக ஒரு சிறிய தட்டி கொஞ்சம் பச்சரிசி மஞ்சள் கலந்து அர்ச்சனையாக தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் வழிபட்ட பிறகு இந்த கல்லுப்பு அதன் விளக்கு தட்டையும் மஞ்சள் அரிசி கலந்த அட்சதை தட்டையும் வீட்டிற்கு வெளியில் கொண்டு சென்று சந்திர பகவானை பார்த்தவாறு வைத்து விடுங்கள். இப்போது பச்சரிசி கையில் வைத்துக் கொண்டுசந்திர பகவானை பார்த்து உங்களுடைய மன குறைகள் பண தேவைகள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த வேண்டுதல் முடிந்த பிறகு பச்சரிசியை மேற்கு திசை பார்த்தவாறு தூவி விடுங்கள். இந்த வழிபாடு செய்யும்பொழுது உங்களுக்கு முன்பாக இந்த தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு கல் உப்பு தீபத்தை வீட்டிற்குள் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டு தாயாரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாடானது உங்களின் செல்வ வளத்தை பல மடங்கு பெருக்குவதுடன் வீட்டில் நிம்மதியை அதிகரித்து கொடுக்கும் உங்களுடைய மனப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்று ஒரே நாளில் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் சந்திர பகவான் சிவபெருமான் இவர்கள் இவர்கள் அனைவரின் ஆசியையும் பெற்றுத் தரும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் தடையின்றி நடக்க தேங்காய் பரிகாரம்

இந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் செய்து நல்ல பலனை பெறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -