- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்த காரியம் தடையின்றி நடக்க தேங்காய் பரிகாரம்

நினைத்த காரியம் தடையின்றி நடக்க தேங்காய் பரிகாரம்

- Advertisement -

நாம் நினைத்த ஒரு காரியம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் விரும்புவோம். அப்படி நடந்தேற வேண்டும் என்றால் அதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலக வேண்டும். இந்த தடைகள் அனைத்தையும் விலக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானை நாம் பல வழிகளில் வழிபட்டாலும் நம்முடைய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளை விலக்குவதற்குரிய மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகர் வழிபாடு

எந்த ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை முழுமனதுடன் நம்பி அவரை வழிபட்டு அந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தோம் என்றால் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த காரியத்தில் ஏதாவது தடைகள் ஏற்பட்டு நடந்தேற முடியாத ஒரு சூழ்நிலைக்கு ஆளாகும் பொழுது தேங்காயை வைத்து இந்த எளிமையான பரிகாரத்தை நாம் செய்யலாம்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் தேங்காயின் உபயோகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் தேங்காய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆன்மீகத்தை பொருத்தவரை எந்த ஒரு ஆன்மீக ரீதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்தில் கண்டிப்பான முறையில் ஒரு தேங்காய் இருக்கத்தான் செய்யும். அதேபோல்தான் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கும் நாம் தேங்காயை பயன்படுத்துவோம்.

இந்த பரிகாரத்தை நாம் எந்த ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறோமோ அந்த காரியத்தில் தடைகள் ஏற்படும் பட்சத்தில் செய்யலாம். புதன்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வேறு எந்த கிழமையிலும் செய்யக்கூடாது. மாலை ஆறு மணிக்கு மேல் நல்ல காயாக பார்த்து ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வீட்டிற்கு எடுத்து வந்து உங்கள் வீட்டின் ஈசானிய மூளை என்று சொல்லக்கூடிய வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அன்றைய இரவு முழுவதும் அந்த தேங்காய் அதே இடத்தில் இருக்கட்டும். மறுநாள் அதாவது வியாழக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு இந்த தேங்காயை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு விநாயகருக்கு முன்பாக இந்த தேங்காயை வைத்துவிட்டு உங்களுக்கு எந்த காரியம் தடைப்பட்டு இருக்கிறதோ அந்த காரியம் எந்தவித தடையும் இன்றி விரைவில் நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறகு விநாயகப் பெருமானை மூன்று முறை சுற்றி வந்து அந்த தேங்காயை எடுத்து சிதறு தேங்காயாக விநாயகப் பெருமானுக்கு உடைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நினைத்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் தேங்காய் சிதறுவது போல சிதறி படிப்படியாக விலகுவதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க சர்க்கரை பரிகாரம்

விநாயகப் பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த தேங்காய் பரிகாரத்தை செய்து நினைத்த காரியத்தை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்வோம்.

சற்று முன்