
காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் பெருமாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வமாக பெருமாள் திகழ்கிறார். அதனால் தான் அவர் செல்வத்திற்கு அதிபதியாகவும் திகழ்கிறார். அப்படிப்பட்ட பெருமாளை நாம் வழிபாடு செய்வதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி செல்வ செழிப்பு அதிகரிப்பதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கப்பெற்றவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகாது என்று கூறப்படுகிறது. செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய இவர்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு சனிக்கிழமை தோறும் வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டு முறையை புரட்டாசி சனிக்கிழமை ஆரம்பித்து வருடம் முழுவதும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும். முதலில் வீட்டிற்குள் மகாலட்சுமி தாயார் வருவதற்கு பெருமாளின் படத்தை நிலை வாசலை திறந்தவுடன் எதிரே இருக்கக்கூடிய சுவற்றில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு பெருமாளின் மந்திரத்தை 11 முறை, 21 முறை அல்லது 108 முறை கூறவேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற இயலாது என்று நினைப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம்.
இப்படி இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வெள்ளை அவலை வைக்க வேண்டும். கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய நண்பரான குசேலரிடம் இருந்து அவலை வாங்கி சாப்பிட்டு தான் அவருக்கு செல்வமழையை பொழிய வைத்தார் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த அவலை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நமக்கும் பெருமாள் செல்வ மழையை பொழிய வைப்பார். இந்த நெய்வேத்தியத்தை வைத்து விட்டு பெருமாளின் இந்த மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ!
இந்த மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுக்கு பெருமாளின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நிதி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்குவதற்குரிய செல்வ வளம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தங்கம் சேர பரிகாரம்
எளிமையான இந்த பொருளை நெய்வேத்தியமாக வைத்து இந்த மந்திரத்தை கூறி பெருமாளின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ வளத்துடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.