ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் குடும்பத்தலைவர் சிறப்பாக இருக்க வேண்டும். குடும்பத்தலைவர் எந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும் வளமுடன் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த குடும்பமும் வளமுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம்பாதிக்க ஆரம்பித்தாலும் குடும்பத் தலைவன் என்ற அந்த பொறுப்பு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குடும்ப தலைவனுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அதனால் அந்த குடும்பமே பாதிக்கப்படும். இப்படி எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்கு வராகி அம்மனை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்று வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதியில் நாம் பார்க்க போகிறோம்.
சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக திகழ்கிறார். அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் மற்ற நாடுகளுக்கு படையெடுத்து செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு விட்டு தான் சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றது. வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
நமக்கு இருக்க கூடிய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வாராகி அம்மன் பெரிதும் துணை புரிவார் என்பது பலரின் அனுபவரீதியான உண்மையாக திகழ்கிறது. எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல் நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார நாம் வேண்டினோம் என்றால் அந்த கஷ்டங்களை கண்டிப்பான முறையில் தீர்த்து வைப்பார். சரி ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வாராகி அம்மனை எப்படி தீபம் ஏற்று வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவோ அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள்ளாகவோ இந்த தீபத்தை நாம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டிலும் ஏற்றலாம். அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மன் கோவிலிலும் ஏற்றலாம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கிக்கொள்ளுங்கள். பழைய அகல் விளக்கை உபயோகப்படுத்தக் கூடாது. அந்த அகல் விளக்கை சுத்தம் செய்து அதற்கும் சந்தன குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் ஏற்றுவதற்கு கருநீல திரியை தயார் செய்வதற்கு நமக்கு கருநீல துணி வேண்டும். சிறிய சதுரமாக கருநீல துணியை வெட்டி அதில் வெண்கடுகை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.
அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றிய அதில் வெண்கடுகு மூட்டையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றிய பிறகு நமக்கு தெரிந்த வாராஹி அம்மனின் மந்திரங்களை கூறலாம். மந்திரம் தெரியாது என்பவர்கள் மனதார வாராஹி அம்மனிடம் வீட்டு ஆண்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் பெண்கள் வாராஹி அம்மனை நினைத்து ஒருபொழுது விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. இப்படி தொடர்ந்து எட்டு வாரங்கள் வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகுவதோடு ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர குலதெய்வ பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக முறையில் வாராகி அம்மனின் அருளால் நாம் நினைத்தது நடக்கும்.