- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், செல்வம் பெருகவும் வீட்டில் வளர்க்க வேண்டிய மரம் பற்றி தெரியுமா

பொதுவாகவே பலரது குடும்பங்களிலும் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒருவருக்கு போதுமான வருமானம் இருந்தாலும், அவர்களை சுற்றி அனைவரும் நல்லவர்களாகவே இருந்தாலும் இவர்களின் மனதில் எப்போதும் ஒரு குழப்பம் இருந்து கொண்டுதான் இருக்கும். இதற்கு நமது வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் தான் காரணமாகும். இவ்வாறு வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அகன்று, லட்சுமி கடாட்சம் நிறைந்து, செல்வங்கள் பெருக இந்த ஒரு மரம் மட்டும் வீட்டில் இருந்தால் போதும். அவ்வாறு வீட்டில் இருக்க வேண்டிய மரத்தைப் பற்றியும் அதன் அற்புதத்தை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழும் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்றும், அதற்கு கடவுளின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். அவ்வாறு கடவுளின் அருளை முழுவதுமாக பெறுவதற்காக தான் வாரந்தோறும் பூஜைகள் செய்து வருகின்றோம்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் கோவில்களுக்குச் சென்று அபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது போன்ற பலவிதமான வேண்டுதல்களை செய்து வருகின்றோம். இருப்பினும் இவ்வாறு பூஜைகள் செய்யும் அனைவரது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருப்பதில்லை. ஏதேனும் ஒரு சில தவறுகளாலும் அல்லது அவர்களை சுற்றி இருக்கும் சூழ்நிலையை பொருத்தும் வீட்டில் எதிர்மறை சக்திகள் நிறைந்திருக்கும்.

இன்றைய காலத்தில் தான் உண்டு தனது வேலை உண்டு என்று ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவர்களின் இனிமையான வாழ்க்கையை பார்த்து மற்றவர்கள் இவர்கள் மட்டும் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்களே என்று அவர்கள் நம்மை பார்க்கும் பார்வையே நமக்கு கண்திஷ்டியாக மாறுகிறது.

- Advertisement -

இவ்வாறான கண் திருஷ்டியினாலும் வீட்டில் எதிர்மறை சக்திகள் உண்டாகிறது. இந்த எதிர்மறை சக்திகளை அகற்றி வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைபெறச் செய்வதற்கு நெல்லி மரத்தை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.

இவ்வாறு தெய்வங்களுக்கெல்லாம் அதிபதியான குபேர கடவுளும் ஒருமுறை அவரது செல்வங்களை இழந்து நிர்கதியாய் நிற்கும்போது விஷ்ணுவிடம் சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார். அதற்கு பகவான் கிருஷ்ணரும் ஒரு நெல்லி மரத்தை வளர்க்குமாறு சொல்லி இருக்கிறார். குபேரன் அவர்களும் நெல்லி மரத்தை வளர்க்க ஆரம்பித்தார்.

இவ்வாறு நெல்லி மரம் வளர ஆரம்பிக்கும் போது அவரது செல்வ வளங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை வந்தடைந்து மீண்டும் அவர் அனைத்து செல்வங்களையும் பெற்று குபேர கடவுளாக மாறினார். நெல்லி மரத்தில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருப்பதால் அவற்றினால் நமது வீட்டில் நேர்மறை சக்திகள் நிறைந்து நம்மைச் சுற்றி உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளையும் அழிந்து நமக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கிறது.

இவ்வாறு பலரது வீட்டிலும் துளசி செடி வளர்க்கப்பட்டு வருகிறது அதனுடன் சேர்த்து நெல்லி மரத்தையும் வளர்த்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து, செல்வ வளங்களும் பெருகி மனதிற்கு இன்பமான வாழ்க்கை கிடைத்திடும்.

- Advertisement -