
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெற வேண்டும் என்றுதான் நினைப்போம். நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும். நம்முடைய திறமைகளையும் வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் வரவேண்டும் என்றுதான் விரும்புவோம். இந்த வாய்ப்புகளை நாம் முயற்சி செய்தும் பெறலாம், ஒரு சில சமயங்களில் அது நம்மை தேடியும் வரலாம். அப்படி புதிய வாய்ப்புகள் நம்மை தேடி வருவதற்கும் நம்முடைய வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும் செப்டம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் என்பது ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்கள் சேர்ந்த மாதமாக திகழ்கிறது. ஆவணி மாதம் என்பது சிவபெருமான் மற்றும் விநாயகரை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாகவும், புரட்டாசி மாதம் என்பது பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாகவும் திகழ்கிறது. மேலும் இந்த மாதத்தில் தான் அம்மனை வழிபாடு செய்வதற்குரிய நவராத்திரியும், முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய புரட்டாசி அமாவாசையும் வருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாதம் நமக்கு நன்மைகளை தருவதற்கு செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நல்லது நடக்க வேண்டும் என்றால் இந்த செப்டம்பர் மாதம் முடிவதற்குள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு கோதுமை மற்றும் வெல்லத்தை தானமாக தர வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கித் தரலாம். எந்த கிழமையில் வேண்டுமானாலும் வாங்கித் தரலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாங்கித் தரலாம். முழு மனதோடு நம்மால் இயன்ற அளவு கோதுமையையும் வெல்லத்தையும் வாங்கி தர நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்லது நம் வாழ்வில் நடக்கும்.
நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் நம்மைத் தேடி வர வேண்டும் என்றால் இந்த செப்டம்பர் மாதம் நிறைவடைவதற்குள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு பச்சரிசி மற்றும் வலம்புரி சங்கை தானமாக தரவேண்டும். பச்சரிசி எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். வலம்புரி சங்கும் எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் வாங்கித் தரலாம். ஆனால் இந்த வலம்புரி சங்கு என்பது ஐந்திலிருந்து ஆறு அங்குலம் அளவிற்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தானத்தை நாம் செய்வதன் மூலம் நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
இதையும் படிக்கலாமே: பக்தியின் நம்பிக்கை தரும் அருள்
இந்த இரண்டு வழிபாட்டையும் செப்டம்பர் மாதம் நிறைவடைவதற்குள் யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கும், புதிய வாய்ப்புகள் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.