
கடன் என்றதும் பலருக்கும் பிரச்சனை என்பதுதான் ஞாபகத்திற்கு வரும். கடன் வாங்கினாலும் பிரச்சனை, கொடுத்தாலும் பிரச்சனை, பிறருக்கு வாங்கி கொடுத்தாலும் பிரச்சினை. இப்படி கடனால் பல பிரச்சினைகளை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் கோடீஸ்வரனாக இருந்தாலும் பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும் பிரச்சனை தான். அப்படிப்பட்ட கடன் பிரச்சினை நீங்குவதற்கு ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி செவ்வாய்க்கிழமை அன்று எந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மைத்ர முகூர்த்தம் என்பது மாதந்தோறும் வரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீருவதற்காக கடனில் சிறிய தொகையை கொடுப்பதன் மூலம் விரைவிலேயே அந்த கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்சினை தீர்வதற்காக பல வவழிபாடுகளையும், பல பரிகாரங்களை செய்தும் பலன் இல்லை என்பவர்களுக்கு மிகப்பெரிய அற்புத வரமாக திகழ்வதுதான் மைத்ர முகூர்த்த நேரம். அந்த நேரம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவது என்பது கூடுதல் சிறப்பாகவே கருதப்படுகிறது.
கடன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட காரணமாக திகழ்பவர் செவ்வாய் பகவான். அவருக்குரிய கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. அந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:26 முதல் 2:37 வரை மைத்ர முகூர்த்த நேரம் வருகிறது. அதாவது குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் கோரையான மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி அந்த நேரத்தில் மைத்ர முகூர்த்த நேரம் வருகிறது என்பதால் அந்த நேரத்தை தவறவிடாமல் ஒரு ரூபாயாவது வாங்கிய கடனிலிருந்து நாம் அடைத்தோம் என்றால் நம்முடைய கடன் விரைவிலேயே அடைந்து விடும்.
இதோடு சேர்த்து ஒரு எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பர் சதுரமாக இருக்க வேண்டும். அதில் செவ்வாய் பகவானுக்குரிய நிறமான சிவப்பு நிறத்திலான பேனா, ஸ்கெட்ச், பென்சில் என்று ஏதாவது ஒன்றை எடுத்து ஒரு வட்டத்தை போட வேண்டும். அந்த வட்டத்தில் நடுவே எந்தவித இடைவெளியும் இருக்கக் கூடாது.
பிறகு அதற்குள் 574 781981 48 என்ற எண்ணை எழுதி விட்டு அதற்கு கீழே யாரிடம் கடன் வாங்கினோமோ அவர்களின் பெயரை எழுதி எவ்வளவு தொகை வாங்கினோமோ அந்த தொகையையும் எழுதி அது என்ன கடன் என்பதையும் எழுதி அதற்கு கீழே கேன்சல் என்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு இதை 9 முறை அந்த எண்ணுடன் சேர்த்து படிக்க வேண்டும்.
பிறகு இந்த பேப்பரை மடித்து தினமும் இரவு நாம் படுக்கும் பொழுது நம்முடைய தலையணைக்கு கீழ் வைக்க வேண்டும். படுப்பதற்கு முன்பாக இதில் எழுதி இருக்கக்கூடியதை ஒன்பது முறை படிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நாம் செய்யும் பொழுது யாருடைய கடன் தீர வேண்டும் என்று எழுதினோமோ அவர்களின் கடன் தீருவதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் அத்தனை நபர்களின் பெயரையும் ஒவ்வொரு பேப்பரில் எழுதி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே ஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை நாளைய தினம் நாம் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். முயற்சி செய்து பாருங்கள்.