
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இந்த குருவின் பார்வை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைப்பவர்களுக்கு அது பலமாகவும் இருப்பதில்லை. குரு அருள் பெறுவதற்கும், நம் வாழ்க்கையில் நடைபெறும் துன்பங்கள் தொலையவும், செவ்வாழைப் பழத்தை வைத்து செய்யக் கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
வியாழன் தோறும் ஒருவேளை உபவாசம் இருந்து குரு பகவானையும், அம்பாளையும் வேண்டிக் கொண்டு, விநாயகர் அருளோடு இப்பரிகாரத்தை செய்ய துவங்குங்கள். வியாழன் கிழமை மாலை வேளையில் பூஜை அறையில் பிள்ளையாரை முதலில் வணங்கிக் கொள்ளுங்கள். பின்னர் குரு பகவானையும், அம்பாளையும் நினைத்து 21 செவ்வாழை பழங்களை பூஜை அறையில் வைத்து மனதார வறுமை நீங்கவும், செல்வம் செழிக்கவும், துன்பங்கள் தொலையவும் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எவ்வளவு வறுமையான சூழ்நிலையில் நாம் இருந்தாலும், நம்மால் பிறருக்கு உதவ முடியும் என்கிற குணம் இருந்தால் போதும், வாழ்க்கையில் வந்த துன்பங்கள் எல்லாம் நிச்சயம் ஒரு நாள் விலகி, நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். செவ்வாழை பழங்களை படைத்து குரு மந்திரங்கள், லட்சுமி ஸ்தோத்திரம் போன்றவற்றை உங்களுக்கு தெரிந்தவரை உச்சரித்துக் கொள்ளுங்கள்.
பிரார்த்தனை முடிந்த பிறகு இந்த செவ்வாழை பழங்களை உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள். தினமும் நீங்கள் ஒரு செவ்வாழை பலம் வீதம் 21 நாட்கள் செவ்வாழை பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பூஜையில் வைத்த பழங்களை தானம் செய்தும், நீங்கள் உங்களுக்காக சாப்பிடக்கூடிய பழங்களை தனியாகவும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கும், மனவலிமைக்கும் நல்ல ஒரு அருமருந்தாக இருக்கும். இது குரு அருளையும், விநாயகர் மற்றும் லட்சுமி அருளையும் பெற்று தரக்கூடியது.
21 வாழைப்பழங்களை சாப்பிட்டவுடன் உங்களுடைய சரீரம் மற்றும் ஆன்மா இரண்டுமே தூய்மையாகவும், இளமையாகவும் நீங்கள் உணர்வீர்கள். ஒவ்வொரு வியாழன் அன்றும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். முடியாதவர்கள் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் வியாழன் கிழமையில் மாலை 5லிருந்து 8 மணி வரையிலும் இந்த பூஜையை செய்து முடிக்கலாம். பூஜை செய்யும் பொழுது மஞ்சள் நிற உடைய அணிவது நல்லது. வியாழன் தோறும் மஞ்சள் நிற வஸ்திரம் அணிந்து பாருங்கள், குரு அருள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
புரட்டாசி 3வது சனிக்கிழமை வாங்க வேண்டிய பொருள்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பது ஜோதிட கூற்று. குருவின் பார்வை இருக்கும் ஸ்தானம் வலுப்பெறுவதற்கு, குரு யோக ஜாதகக்காரர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம். மற்றவர்கள் குரு அருள் கிடைக்கவும், ஏழ்மை நீங்கி செல்வம் செழிக்கவும் இந்த எளிய பரிகாரத்தை உள்ளார்ந்த நம்பிக்கையுடன் செய்யும் பொழுது தேவாதி தேவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களும் இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வியாழன் தோறும் தம்பதியராக அமர்ந்து குரு மந்திரம் சொல்லி, மஞ்சள் நிற பூக்களால் குருவிற்கு அர்ச்சனை செய்து, செவ்வாழை பழத்தை நைவேத்தியம் வைத்து படைத்து வழிபட்டு, நீங்களும் அதை சாப்பிட்டு வர விரைவிலேயே புத்திர பாக்கியம் கிட்டும். இத்தகு நற்பலன்களை வழங்கக்கூடிய செவ்வாழை பழத்தை தவறாமல் அனைவரும் சாப்பிட்டு பலன் பெறலாமே.