- Advertisement -

சோம வார சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய ஒரு தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். சங்கடங்களை மட்டும் அல்லாமல் நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி வெற்றிகளை தரக்கூடிய தெய்வமாகவும் விநாயகர் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்குரிய திதியாக தான் சதுர்த்தி திதி திகழ்கிறது. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று வீட்டிலேயே எளிமையான முறையில் விநாயகரை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நவகிரகங்களின் தலைவராகவும் முழுமுதல் கடவுளாகவும் திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமான் நம்மை சுற்றி பல இடங்களில் மிகவும் எளிமையான முறையில் வீற்றிருப்பார். அவரை மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்தால் கூட அவர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டியதை நமக்கு அருள்வார். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை நாம் ஒவ்வொரு முறையும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி நாள் எந்த கிழமையில் வருகிறதோ அதற்கு ஏற்றார் போல் விநாயகப் பெருமான் பலனை தருவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை திங்கட்கிழமையோடு சேர்ந்து சங்கடகர சதுர்த்தி என்பது வருகிறது. திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்குரிய கிழமை. சந்திர பகவானுக்கு சாபத்தை கொடுத்து அவருடைய சாபத்திலிருந்து விடுபடச் செய்தவர் விநாயகப் பெருமான் என்பதால் சோமவார சங்கரஹர சதுர்த்திக்கு அதீத பலம் இருக்கிறது என்று கூறலாம்.

ஜூலை மாதம் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டில் நாம் செய்யலாம். கண்டிப்பான முறையில் விநாயகரின் படம் அல்லது சிலை இருக்கும். அதற்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதேபோல அருகம்புல் கிடைக்கும் பட்சத்தில் அருகம்புல்லையும் விநாயகருக்கு சமர்ப்பணம் செய்யலாம். இவ்வாறு செய்து முடித்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக விநாயகர் பெருமானுக்கு முன்பாக ஒன்பது அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானின் பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்து வழிபாட்டை நிறைவு செய்பவர்களுக்கு சந்திர பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும் நீங்கும். அதேசமயம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் விலகும்.

மந்திரம்

“ஓம் நமோ கணேசாய நமஹ”

இதையும் படிக்கலாமே: 13-7-2025 சனி வக்ர பெயர்ச்சி மந்திரம்

எளிமையான கடவுளாக கருதக்கூடிய விநாயகப் பெருமானை எளிமையான முறையில் நாம் முழுமனதோடு வழிபாடு செய்ய அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -