- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

சமாதியில் இருந்து வெளியில் வந்து உரையாடிய ராகவேந்திரர் – உண்மை சம்பவம்

தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை புரிந்து மக்களை காத்தவர் ஸ்ரீராகவேந்திரர். அவர் தன் இறப்பிற்கு பிறகும் தன்னை நாடி வரும் பக்தர்களை காத்தருள்வதோடு தேவைப்பட்டால் நேரிலே தோன்றி அருள்புரிபவர். பிரிட்டிஷ் காலத்தில் ராகவேந்திரரே சமாதியில் இருந்து நேரில் தொன்றி ஆங்கிலேயரோடு உரையாடிய ஒரு உண்மை சம்பவத்தை தான் இந்த பதிவில் பார்ப்பிக்கப்போகிறோம்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது மாஞ்சாலி என்னும் கிராமம். இங்கு தான் பகவான் ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்தார். இந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்தான் என்பதால் அதே இடத்தை தனது ஜீவசமாதிக்காக தேர்ந்தெடுத்தார் ஸ்ரீராகவேந்திரர். அப்போது அந்த பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கான் என்ற மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த இடத்தை ராகவேந்திரருக்கு கொடுக்க, அந்த இடத்தில் கடந்த 1671ம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.

- Advertisement -

கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் படி கோவில் நிலத்திற்கு யாரும் வாரிசு இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளலாம். அந்த சட்டத்தின்படி பிருந்தாவனத்திற்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மன்னர் சுல்தான், பகவான் ராகவேந்திரருக்கு இந்த இடத்தை பல வருடங்களுக்கு முன்பாகவே தானம் செய்ததால் இந்த இடம் ராகவேந்திரருக்கே சொந்தம் என போராடினர். இதனை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம், சர் தாமஸ் மன்றோ என்பவற்றின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இதற்கான தீர்வை கண்டறிய உத்தரவிட்டது.

- Advertisement -

மன்றோவும் அவரது குழுவினரும் ராகவேந்திரரின் ஆலயத்தை நோக்கி விரைந்தனர். மன்றோ இந்து மதம் மீது மரியாதை கொண்டவர் என்பதால் தன்னுடைய காலனி மற்றும் தொப்பியை வெளியிலேயே கழட்டிவிட்டு ஜீவசமாதி அருகே சென்றார். பின் அங்கு யாரோ ஒருவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு ஆங்கிலத்தில் உரையாட ஆரமித்தார். அனால் அவருடன் வந்த குழுவினருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்றால் அங்கு யாருமே இல்லை ஆனால் மன்றோ மட்டும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார். இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைத்தனர் எல்லோரும்.

மன்றோவோ, பிரிட்டிஷ் ஆணை குறித்த முழு விவரத்தையும் தெளிவாகா ஆங்கிலத்தில் எடுத்துரைத்துக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு மருதரப்பில் உள்ள நியத்தையும் கேட்டறிகிறார். இந்த உரையாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. அதன் பிறகு ஆங்கில பாணியில் ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார். அவருடன் வந்த குழுவினர் திகைப்போடு, யாரிடம் இவளவு நேரம் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்டனர்.

அங்கே ஒரு பெரியவர், ஒளிவீசும் கண்களோடு காவி உடையில் உயரமாக இருந்தாரே அவரிடம் தான். அவரிடம் நான் அரசின் சட்டம் குறித்து விளக்கினேன். அவரும் இந்த சொத்து பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்தார். அதில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதை நான் தெளிவாக புரிந்துகொண்டு என்றார். அதோடு அந்த நபருக்கு எப்படி இவளவு ஆங்கில அறிவு, அவரின் ஒளிவீசும் கண்களும், தெளிவான ஆங்கில உச்சரிப்பும் என்னையே பிரமிக்க வைத்தது என்று அவர் கூறுகையில் அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். இதனை கவனித்த அவர் ஏன் நீங்கள் அவரை பார்க்கவில்லையா? என்று குழுவினரைப் பார்த்து கேட்டார்.

எங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறினார்கள் அந்த குழுவினர். தன்னோடு உரையாடியவர் பகவான் ஸ்ரீராகவேந்திரர் தான் என்பதை உணர்ந்த மன்றோ, கடந்த நூற்றாண்டில் ஜீவ சமாதி அடைந்த மகான், பிரச்னையை தீர்க்க நேரில் தோன்றி தன் மொழியில் தன்னோடு உரையாடியதை எண்ணி பூரித்துப்போனார். அந்த சொத்து மடத்திற்கே சொந்தம் என்பதை அரசிற்கு தெரிவித்ததோடு அன்றுமுதல் பகவான் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரானார் சார் மன்றோ. இந்த தகவல் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -