- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த பொருளை மட்டும் சப்பாத்திக்குள் ஒளித்து வைத்துக் கொடுத்தால், உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு எத்தனை சப்பாத்தி இருந்தாலும் பத்தவே பத்தாது.

சப்பாத்தி என்றாலே ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலர் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். சப்பாத்தி வகைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் ‘ஸ்டஃப்டு சப்பாத்தி’ மிகவும் அருமையாக இருக்கும். அதாவது சப்பாத்திக்கு எந்த சைட்டிஷூம் இல்லாமல் சப்பாத்திக்குள் எதையாவது ஒளித்து வைத்துக் கொடுத்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். வெறும் சப்பாத்தியை விட இதுபோன்ற ஸ்டஃப்டு சப்பாத்திகள் பெரும்பாலானோர் விரும்பும் வகையறாக்களில் ஒன்று. இப்போது நாம் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் சில பொருட்களை சப்பாத்திக்க்குள் ஒளித்து வைத்து அட்டகாசமான ஸ்டஃப்டு சப்பாத்தி வித்யாசமான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஸ்டஃப்டு சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு, துருவிய சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ்,
பீட்ஸா சீசனிங் அல்லது பீட்ஸா ஒரேகனோ.

- Advertisement -

முதலில் சப்பாத்தி செய்வதற்கு தேவையான கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, நன்றாக மிருதுவாக வரும் படி பிசைந்து கொள்ள வேண்டும். எப்போதும் கோதுமை மாவு மிருதுவாக வருவதற்கு நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவுக்கு சேர்க்கப்படும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தால் மாவு மிருதுவாக வரும். இறுதியாக மாவின் மீது எண்ணெய் தடவி அதன் பின் அப்படியே ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரம் கழித்து சப்பாத்திகளை பெரிது பெரிதாக தட்டி எடுக்கவும். அப்போது தான் உள்ளே ஸ்டஃப் செய்யும் பொருட்களை வைத்து மூடி வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். பெரிதாய் சப்பாத்தியை தட்டியதும் அதன் நடுவே துருவிய சீஸ் தூவ வேண்டும். பின்னர் அதன் மேலே சில்லி ப்ளேக்ஸ் சிறிதளவு சேர்த்து, அதனுடன் பீட்சா செய்வதற்கு பயன்படுத்தப்படும் பீட்ஸா சீசனிங் அல்லது பீட்ஸா ஒரேகனோ எனப்படும் ஒரு வகை மசாலாக்களை லேசாக தூவி விட வேண்டும். இது மிகவும் அருமையான சுவையை குழந்தைகளுக்கு கொடுக்கும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

இந்த ஸ்டஃப்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பீட்சா போல் இருக்கும். பீட்சா பிடிக்காதவர்கள் இது போன்ற சப்பாத்தியை செய்து சாப்பிடலாம். உள்ளே அத்தனை பொருட்களையும் வைத்த பின் முதலில் இரண்டு ஓரங்களிலும் மடித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் மற்ற இரண்டு முனைகளையும் வைத்து மூடி உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியில் வராதவாறு அழுத்தி விட வேண்டும். இப்போது உங்களுக்கு சப்பாத்தி செவ்வக வடிவில் கிடைக்கும். ஒருபுறம் அதிக கனமாகவும் மறுபுறம் சமமாகவும் இருப்பதால் இதனை நன்கு வேகவிட வேண்டும்.

ஒரு நான்ஸ்டிக் ப்பேனை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை போடுங்கள். ஒரே புறம் அப்படியே விடாமல் இரண்டு புறமும் மாற்றி மாற்றி திருப்பி போடுங்கள். சப்பாத்தி பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து விடலாம். மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும் இந்த சப்பாத்தியை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சுவைக்கலாம். பீட்சா, சப்பாத்தி பிடிக்காதவர்கள் கூட இந்த சப்பாத்தியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரு முறை செய்து பார்த்து வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடுங்கள்.

- Advertisement -

சில்லி ஃப்ளேக்ஸ், பீட்ஸா சீசனிங், பீட்ஸா ஒரேகனோ இது போன்ற பொருட்களின் சுவை குழந்தைகளை வெகுவாக கவர்கிறது. இதை தனியே சூப்பர் மார்கெட்டுகளில் வாங்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது தூவி உணவை கூடுதல் சுவையாக்கலாம். இதன் விலையும் மிக குறைவு தான்.

இதையும் படிக்கலாமே
ஜவ்வரிசி வத்தலா? ‘கூழ் காய்ச்ச வேண்டுமே’! என்ற பயம் இனி வேண்டாம். சுலபமான முறையில் ஜவ்வரிசி வத்தல் எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Stuffed chapathi varieties in Tamil. Stuffed chapathi recipes. Stuffed chapathi recipes in Tamil. Stuffed chapathi home cooking. Cheese stuffed chapathi.

- Advertisement -