- Advertisement -
வீட்டு குறிப்புகள்

வீட்டை விட்டு பல்லியை வெளியேற்ற டிப்ஸ்

சில பேர், வீட்டில் பல்லி இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். ஆனால், அந்தப் பல்லியே வீட்டில் பல மடங்கு பெருத்து விட்டால், அதுவே நமக்கு பிரச்சனையாக மாறிவிடும். சமையலறையில் சமைத்து வைத்த பொருட்களில் எல்லாம் பல்லி விழுந்து விடுமோ என்ற பயம் இருக்கும். அலமாரியில் இருந்து எந்த பொருளை எடுத்தாலும், அதன் பின்னால் பல்லி இருக்குமோ என்ற பயம் வரும்.

சில சமயம் நம்முடைய தலைமேலே பல்லி வந்து விழும். சில பேருக்கு இது அருவருப்பை கொடுக்கும். உங்க வீட்லையும் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதா. இந்த பல்லியை வீட்டை விட்டு துரத்த எளிமையான வீட்டு குறிப்பு.

- Advertisement -

பல்லி தொல்லை நீங்க

பல்லிக்கு நிறைய வாசனை பிடிக்காது. குறிப்பாக விக்ஸ்வாசனை பல்லிக்கு சுத்தமாக பிடிக்காது. அதாங்க, மூக்கடைப்பு நெஞ்சு சளிக்கு தடவுவோம் அல்லவா. இந்த வாசம் உனக்கு பிடிக்காதா அப்படின்னு, நீங்க பல்லி கிட்ட போய் கேட்டீங்களா. அப்படின்னு எல்லாம் கேக்காதீங்க. தேவைப்பட்டால் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கோங்க. அதில் 1 ஸ்பூன் ஆப்ப சோடா போட்டுட்டு, 1 ஸ்பூன் டெட்டால் ஊத்திட்டு, 1/2 ஸ்பூன் விக்ஸ் போட்டு நல்ல கலந்து விடுங்கள். பிறகு கொதிக்கின்ற தண்ணீர் சிறிதளவு ஊற்றி, இதை லிக்விட் ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

- Advertisement -

இந்த லிக்விடை பல்லி வரக்கூடிய இடத்தில் எல்லாம் ஸ்பிரே செய்து வைக்கலாம். குறிப்பாக டியூப் லைட்டுக்கு கீழே, பீரோவுக்கு கீழே, சமையலறை மேடைக்கு கீழே எல்லாம் இந்த ஸ்ப்ரேவை தெளித்து விடுங்கள். நம்முடைய வீட்டுக்குள் பல்லி வரக்கூடிய இடம் என்றால் எக்ஸாஸ் ஃபேன் ஓட்டை வழியாக வீட்டிற்குள் பல்லி வரும். ஜன்னல் பக்கமாக பல்லி வரும்.

அந்த இடத்தில் எல்லாம் கூட இந்த ஸ்ப்ரேவை தாராளமாக அடித்து விடலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த லிக்விடை தயார் செய்து பல்லி வரக்கூடிய இடத்தில் அடித்து விட்டால் பல்லிகள் வரவே வராது. வீட்டிற்குள் இருக்கும் பல்லிகளும் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

- Advertisement -

பல்லியை வீட்டை விட்டு துரத்துவதற்கு செயற்கையாக நிறைய மருந்து பொருட்கள் கடைகளில் விற்கிறது. ஆனால் அதெல்லாம் எந்த அளவுக்கு சேஃப்டி என்பது நமக்கு தெரியாது. இந்த லிக்விட்டை தயார் செய்ய நாம் பயன்படுத்தி இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்கள் தான். அதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது என்ற திருப்தியும் நமக்கு இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சமையலறைக்கு தேவையான புத்தம் புது குறிப்புகள்

இரவு சமையலறையை சுத்தம் செய்துவிட்டு சிங்குக்கு உள்பக்கத்திலும் இதை ஸ்பிரே செய்து விடுங்கள். ஸ்டவ்வுக்கு கீழ் பக்கத்திலும் இந்த லிக்விடை ஸ்பிரே செய்து விடுங்கள். குட்டி குட்டி பூச்சிகள் தொந்தரவும் உங்களுக்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக எளிமையான குறிப்பு ஆனால் நல்ல வேலை செய்யக்கூடிய வீட்டு குறிப்பு இது. இல்லத்தரசிகளுக்கு தேவை என்றால் பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -