
ஒருவருடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட சுபகாரியங்கள் என்பது நடைபெறும். அந்த சுப காரியங்களில் ஏதாவது ஒன்று தடைப்பட்டு இருந்தாலும் அதனால் அவர்களுக்கு கஷ்டமான சூழ்நிலையே உண்டாகும். அந்த கஷ்டத்தை நீக்குவதற்கும் தடைபட்டிருக்கக் கூடிய சுபகாரியங்களை தடை இன்றி நடைபெற செய்வதற்கும் வாராகி அம்மனை நினைத்து செய்யக்கூடிய ஒரு குண்டு மஞ்சள் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒரு குழந்தை பிறப்பது சுப காரியமே, அந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதும் சுபகாரியமே, அந்த குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதும் சுபகாரியமே, அந்த குழந்தை சிறப்பாக பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்வது சேர்வதும் சுபகாரியமே, கல்லூரி படிப்பை முடித்து தனக்கு விரும்பிய வேலையில் சேர்வதும் சுபகாரியமே, வேலையில் எதிர்பார்த்த அளவுக்கு சம்பள உயர்வு கிடைப்பதும் சுபகாரியமே, திருமணம் நடைபெறுவதும் சுபகாரியமே, குழந்தை பிறப்பதும் சுபகாரியமே, அந்த குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதும் சுப காரியம் தான் என்று ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய பல காரியங்கள் சுப காரியங்களாகவே திகழ்கின்றன. இவற்றின் எது தாமதம் அடைந்தாலும் எது நடைபெறாமல் தடைப்பட்டிருந்தாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.
இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் எந்த சுபகாரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் வேண்டும். ஒன்று குண்டு மஞ்சள், மற்றொன்று தாழம்பூ எசன்ஸ். குண்டு மஞ்சள் அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும். தாழம்பூ எசன்ஸ் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதுவும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் இழைக்கும் கல்லில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு தாழம்பூ எசன்ஸ் சேர்த்து குண்டு மஞ்சளை அதில் உரச வேண்டும். அப்பொழுது மஞ்சள் விழுது நமக்கு கிடைக்கும். இந்த மஞ்சள் விழுதை எந்த சுப காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நினைத்துக் கொண்டும் வாராகி அம்மனை நினைத்துக் கொண்டும் இந்த மஞ்சள் விழுதை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் சுபகாரியம் நடைபெற வேண்டும் என்று வாராஹி அம்மனிடம் வேண்டுதலை வைத்துக்கொண்டு இந்த மஞ்சளை வைப்பவர்களுக்கு அந்த சுப காரியத்தடை நீங்குவதோடு மட்டுமல்லாமல் விரைவிலேயே சுப காரியம் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:பூஜை அறையில் இருக்கக் கூடாத பொருட்கள்
வாராஹி அம்மனை முழுமனதோடு நினைத்து இந்த குண்டு மஞ்சள் பரிகாரத்தை செய்பவர்களுக்கு விரைவிலேயே சுப காரியம் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.