- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபூஜை அறையில் இருக்கக் கூடாத பொருட்கள்

பூஜை அறையில் இருக்கக் கூடாத பொருட்கள்

- Advertisement -

பூஜை அறையில் சுவாமி படங்களை வைத்து, சுவாமி கும்பிட வேண்டும் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு சில பேர் ஆர்வக்கோளாறில் ஒரு சில தவறுகளை செய்கிறார்கள். பூஜை அறையில் தேவையற்ற விஷயங்களை சேகரிக்கும் போதும், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். அந்த வகையில் உங்களுடைய வீட்டு பூஜை அறையிலும் நீங்கள் பின் சொல்ல கூடிய இந்த தவறுகளை செய்திருந்தால், அதை உடனே சரி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பப் பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும்.

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

இறைவழிபாடு செய்யவில்லை என்றால் கூட, சில பேர் வீட்டில் கஷ்டம் வராது. ஆனால் சில பேர் வீட்டில் விழுந்து விழுந்து சாமி கும்பிடுவாங்க. அந்த வீட்டில் கஷ்டம் பிரியவே பிரியாது. எப்படி தெரியுமா. நானும் சாமி கும்பிடே இருக்கேன் என்று சொல்லி, செல்லும் கோவிலில் இருந்து எல்லாம் ஒவ்வொரு புகைப்படமாக வாங்கி வந்து பூஜை அறையில் அடுக்கி வைப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பூஜை அறையில் சுவாமி படங்களை வைப்பதற்கே இடம் எடுக்காது. ஒரு சுவாமி படத்திற்கு பின்னால் இன்னொரு சுவாமி படத்தை அடுக்கி வைத்து விடுவார்கள்.

- Advertisement -

சுவாமி படங்களை வீட்டிற்கு வாங்கி வருவதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால் அந்த படத்திற்கு எல்லாம் பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த இறைவனுக்கு தினமும் சாப்பாடு போட வேண்டும். அதாவது நெய்வேதியம் வைக்க வேண்டும். இறைவனுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா. வாங்கி வைத்த சாமி படங்களை அப்படியே பட்டினி போட்டு வைத்தால் குடும்பத்தில் கஷ்டம் வருமா வராதா.

சில பேர் இன்று வீடியோவை பார்த்து மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு சுவாமி சிலை, இந்த சக்கரம், அந்த சக்கரம் என்று சொல்லி எல்லா பொருட்களையும் வாங்கி வந்து பூஜை அறையில் குவித்து வைத்துக் கொள்கிறார்கள். ஆர்வக்கோளாறில் ஒரு சில நாட்கள் அந்த பொருட்களுக்கான பூஜை புனஸ்காரங்களை முறையாக பின்பற்றி விட்டு பின்வரும் காலத்தில் அந்த பொருட்கள் எல்லாம் பூஜை அறையில் ஏதோ ஒரு மூலையில். போட்டு வைத்து விடுவார்கள். அதுவும் மிகப்பெரிய தவறுதான்.

- Advertisement -

அளவோடு சுவாமி படங்களை வைத்து சுவாமி கும்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக ஒரு சின்ன சின்ன அட்டையில் இருக்கும் சுவாமியை கூட கொண்டுபோய் பூஜை அறையில் வைத்து அந்த பேப்பரில் அட்டையில் பூச்சி பிடித்து, பூஜை அறை பராமரிக்கப்படாமல் இருக்கும். உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பிரச்சனை இருந்தால் அந்த இடத்தில் தெய்வங்கள் நிச்சயம் வாழாது.

பூஜை அறையை முதலில் எடுத்து சுத்தம் செய்யுங்கள். தேவையில்லாத சுவாமி படங்களை எல்லாம் பூஜை அறையிலிருந்து எடுத்து அகற்ற வேண்டும். ஒரு அகலமான பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அட்டையில் இருக்கும் சுவாமி படம், பேப்பரில் இருக்கும் சுவாமி படம் எல்லாவற்றையும் எடுத்து அந்த தண்ணீரில் நனைத்து ஊறவைத்து கரைத்து அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள்.

- Advertisement -

செல்லரித்த சுவாமி படங்கள், ரொம்பவும் பழையதாக இருக்கும் சுவாமி படங்கள் எல்லாம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது. உங்கள் வீட்டு பூஜை அறையில் மேல் சொன்னபடி செல்லரித்து பூச்சி பிடித்து இருந்தால் அதை எல்லாம் சுத்தம் செய்து தேவையான சுவாமி படங்களை மட்டும் வைத்து வழிபாடு செய்து பாருங்கள். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும். தேவையான படம் என்றால் எந்தெந்த படங்களை வைக்கலாம்.

எல்லோர் வீட்டிலும் இந்த ஐந்து சுவாமி படங்கள் சேர்ந்து ஒரு திருவுருவப்படம் இருக்கும். லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர், பெருமாள், முருகர், அந்த படத்தை வைக்க வேண்டும். இது தவிர ஒரு குலதெய்வ படம் வைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர உங்களுக்கு ரொம்ப ரொம்ப இஷ்ட தெய்வம் யாராவது இருந்தால் அந்த திரு உருவ படத்தை வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 28-10-2024 வாஸ்து நாள் பரிகாரம்

இது மட்டும் போதுமானது. அந்த திரு உருவப்படத்திற்கு தினமும் பூ போட்டு விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த இரண்டு உலர் திராட்சை நெய்வேத்தியமாக வைத்தாலும் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்