- Advertisement -

கடன் பிரச்சினையை தீர்க்கும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியை தான் நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். அந்த சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருக்க ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது கடன் பிரச்சினை தீர்வதற்காக செய்ய வேண்டிய ஒரு வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கிர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணமாக திகழ்வது கடன் பிரச்சினை தான். இந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நமக்கு பணவரவு என்பது தாராளமாக இருக்க வேண்டும். பணவரவு தாராளமாக இருக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை செய்வதோடு தெய்வ அருளையும் பெறவேண்டும். அந்த வகையில் தை மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி வருகிறது. பணரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய சங்கடஹர சதுர்த்தியாக இது திகழ்கிறது. இந்த நாளை தவறவிடாமல் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் பண பிரச்சினைகள் தீர்வதோடு கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் செய்வதற்கு மாலை நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் தான் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டை செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை ஆலயத்திற்கு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயும் இந்த வழிபாட்டை செய்யலாம். கடன் தொடர்பான பிரச்சனை தீர விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் அபிஷேகத்திற்காக பச்சரிசி மாவை வாங்கித் தர வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிலேயே பச்சரிசியை வாங்கி கழுவி சுத்தம் செய்து அதை அரைத்து மாவாக்கி கொண்டு போய் கொடுப்பது என்பது நல்லது. முடியாதபட்சத்தில் கடையிலிருந்து வாங்கி கொடுக்கலாம்.

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகருக்கு பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்யலாம். அடுத்ததாக விநாயக அகவலை பாட வேண்டும். பிறகு விநாயகப் பெருமானின் 108 நாமங்களை கூறி வன்னி மர இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்தில் வன்னி மர இலைகளை கொடுத்து யாரின் பெயரில் அதிக அளவில் கடன் இருக்கிறதோ அவர்களுடைய பெயரை கூறி அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். இப்படி அர்ச்சனை செய்வதன் மூலம் கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு அன்றைய தினத்தில் குறைந்தது பத்து நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 30 நிமிடம் வரை விநாயகரின் இந்த ஒரு திருநாமத்தை முழுமனதோடு கூறுபவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரத்தை எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். யார் வேண்டுமானாலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்த வித தடையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரம்


“ஓம் கபிலாய நமஹ”

இதையும் படிக்கலாமே:தை முதல் வெள்ளி காமாட்சி அம்மன் வழிபாடு
இந்த எளிமையான வழிபாட்டு முறையை சங்கடஹர சதுர்த்தி நாளன்று பின்பற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு பண பிரச்சனையும் தீரும். கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -