மனிதர்களுக்கு வாழ்க்கையில் தீர்க்க முடியாத கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் என்று நிறைய இருக்கிறது. உங்களுடைய மனதில் தீரா துன்பமாக என்ன விஷயம் இருக்கிறது. என்ன கஷ்டம் இருக்கிறது. அந்த துன்பம் சரியாக வேண்டும் என்று, நாளைய தினம் வரக்கூடிய தை முதல் வெள்ளிக்கிழமையில், காமாட்சி அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை துவங்கி, இந்த விளக்கை வீட்டில் ஏற்றி பாருங்கள்.
அடுத்த 16வது வாரம், காமாட்சியம்மனை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுவதற்குள், நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடந்து முடியும். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்தால், இந்த வழிபாட்டை நான் சொல்லவில்லை. மகா பெரியவா அவர்கள் தன் பக்தன் ஒருவனுக்காக சொன்ன வழிபாடு தான் இது.
அந்த பக்தனுக்கும் 16 வாரம் முடிவதற்குள் கை மேல் பலன் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மகா பெரியவா அவர்கள், அந்த தெய்வத்தின் ரூபத்தில், இந்த பூமியில் மனித பிறவி எடுத்து, அனைவருக்கும் ஒரு குருவாக திகழ்ந்து, நமக்கெல்லாம் நல்ல வழிகளை காட்டிய மகான். இது நாம் எல்லோருக்கும் தெரியும். மகா பெரியவா மீது நம்பிக்கை உள்ளவர்கள் காமாட்சி அம்மனின் மீது பாரத்தை போட்டு நாளை இந்த வழிபாட்டை துவங்குங்கள்.
காமாட்சி அம்மன் வழிபாடு
எல்லோர் வீட்டிலும் காமாட்சியம்மன் விளக்கு இருக்கும். பெரும்பாலானவர்கள் வீட்டில் காமாட்சி அம்மன் திருவுருவப்படம் இருக்காது. கூடுமானவரை ஒரு சின்ன காமாட்சியம்மன் திருவுருவப்படம் பூஜை அறையில் வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. காமாட்சியம்மன் இல்லையென்றால் புதுசாக ஒரு படம் வாங்கி வைத்து, அந்த படத்திற்கு முன்பாக ஒரு தாம்பல தட்டு வைத்து விடுங்கள்.
அதில் முதல் வெள்ளிக்கிழமை ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். காமாட்சி அம்மனுக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைக்கவும். எதுவுமே செய்ய முடியாது என்றால் 2 வாழைப்பழம், 2 கல்கண்டாவது நெய்வேத்தியம் வைத்துவிட்டு, காமாட்சியம்மனுக்கு பிடித்த ஏதாவது ஒரு பாடலை ஒலிக்க விடுங்கள்.
உங்களுக்கு தெரிந்த காமாட்சி அம்மன் பாடலை பாடுங்கள். பிறகு உங்களுடைய ஒரே ஒரு கோரிக்கை ஒரே ஒரு வேண்டுதலை, காமாட்சி அம்மனிடம் வையுங்கள். 16 வாரத்திற்குள் எனக்கு இந்த கோரிக்கை நிறைவேற வேண்டும். என்றும் பிரார்த்தனை செய்யலாம் அந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், குறிப்பிட்ட இந்த பண பிரச்சனை தீர வேண்டும், உடல் ஆரோக்கியம் சரியாக வேண்டும் என்று, என்ன வேண்டும் என்றாலும் பிரார்த்தனை வைக்கலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம். இத்தனை பிரார்த்தனையும் வைக்காதீங்க.
எதாவது ஒரு வேண்டுதல், உங்களுக்கு தேவையான வேண்டுதலை வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். முதல் தை வெள்ளிக்கிழமை நாளை இதை நீங்கள் துவங்கினால், ரொம்ப ரொம்ப நல்லது. வேறு எந்த வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை துவங்கினாலும் சிறப்பான பலன் தான். இருந்தாலும் தை முதல் வெள்ளிக்கிழமை கூடுதல் சிறப்பு.
இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை மேலே சொன்ன அதே வழிபாட்டு முறை தான். ஆனால் இரண்டாவது வாரம், இரண்டு மண் அகல் விளக்குகளை காமாட்சியம்மன் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஏற்றி வைத்துவிட்டு பிரார்த்தனை வைக்க வேண்டும். மூன்றாவது வாரம் மூன்று காமாட்சியம்மன் விளக்கு, இதுபோல தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் விளக்கின் எண்ணிக்கையை மட்டும் கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
16 வது வாரம், 16 விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பூஜையை மனநிறைவோடு எவர் ஒருவர் செய்து முடிக்கிறீர்களோ, அவர்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். பதினாறாவது வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் கொஞ்சம் பிரசாதம் செய்து வைத்து வெற்றிலை பாக்கு பூ பழம் மஞ்சள் குங்குமம் எல்லாம் வைத்து வழிபாடு செய்து யாரேனும் ஒருவருக்கு கூட நீங்கள் இந்த தாம்பூலத்தை தானமாக கொடுக்கலாம் ரொம்ப ரொம்ப நல்லது.
நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். பெண்களுக்கு இடையில் மாதவிடாய் நாட்கள் வருமே, அந்த வெள்ளிக்கிழமை என்ன செய்வது? அந்த வாரத்தை தவிர்த்து விட்டு அடுத்த வாரம் கணக்கு வைத்துக் கொள்ளலாம். எந்த தவறும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் வாராகி வழிபாடு
ஆனால் வேறு காரணத்திற்காக இந்த வழிபாடு தடைபடக்கூடாது. வெளியூருக்கு செல்வது அல்லது கல்யாணத்துக்கு செல்வது இதுபோல காரணங்களுக்காக இந்த வழிபாடு எக்காரணத்தைக் கொண்டும் தடைபடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். உங்கள் தீரா துன்பங்களுக்கு வழிகாட்ட இந்த பரிகாரமும் ஒரு வகையில் உதவியாக இருக்கும் அல்லவா. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் சமர்ப்பணம். ஓம் காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி. காஞ்சி மகா பெரியவா பாதங்கள் சரணடைவோம்.