
முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான அதே சமயம் சிறப்பு மிகுந்த விரத நாளாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை முடிந்த அடுத்த நாள் வரும் என்றும் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்றும் ஆறாவது நாள் முருகப்பெருமான் சூரசமஹாரரை வதம் செய்த பிறகு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட விரத நாட்களில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது எந்த வேண்டுதலுக்காக விரதம் இருக்கிறோமோ அந்த வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அப்படி முருகப்பெருமான் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு கந்த சஷ்டியின் ஆறாவது நாள் பூஜை செய்யும் பொழுது சேர்க்க வேண்டிய சில பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வத்தை நினைத்து விரதம் இருந்தாலும் வழிபாடு செய்தாலும் விரதம் இருந்து வழிபாட்டை செய்யும் பொழுதும் விரதம் இருக்காமல் வழிபாட்டை செய்யும் பொழுதும் அந்த வழிபாட்டில் அந்த தெய்வத்திற்குரிய பிடித்தமான பொருட்களை சேர்ப்பதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் எளிதில் பெற முடியும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் சூரசம்கார நாளான கந்தசஷ்டி ஆறாம் நாள் செய்யக்கூடிய பூஜையில் சேர்க்க வேண்டிய பொருட்களை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பொருட்களை சூரசம்கார நாளான அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கடையிலிருந்து வாங்கி வருவது மிகவும் சிறப்பு. ஒருவேளை வீட்டிலேயே இந்த பொருட்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவாகவே சூரசம்ஹார நாளன்று சூரசம்காரம் நிறைவடைந்த பிறகு தான் வீட்டில் பூஜை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அவ்வாறு பூஜை செய்யும் பொழுது முருகப்பெருமான் கண்டிப்பான முறையில் வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். வாழைப்பழம் செவ்வாழைப்பழமாக இருப்பது கூடுதல் சிறப்பை தரும். வெற்றிலை பாக்காக வைக்க இயலவில்லை என்றால் கூட வெற்றிலையை பயன்படுத்தி முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம்.
அதேபோல் முருகப் பெருமானை குளிர்விக்கும் வகையில் சுத்தமான சந்தனத்தை வாங்கி வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். அந்த சந்தனத்தில் பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்து முருகப்பெருமானின் மார்பில் வைப்பது முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற உதவும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். அதனால் ஒரே ஒரு துண்டாவது சுக்கை வாங்கி வந்து முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்யும்பொழுது முருக பெருமானின் அருளை நம்மால் எளிதில் பெற்று விட முடியும்.
அன்றைய தினம் கண்டிப்பாக முறையில் முருகப்பெருமானுக்கு மலர்களை சாற்றுவோம். அவ்வாறு மலர்களை சாற்றும்போது அந்த மலர்களில் செவ்வரளி மலர்கள் இருப்பதைப் போல் பார்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பை தரும். முருகப் பெருமானுக்கு எத்தனை தீபங்கள் ஏற்றுகிறோமோ அத்தனை தீபங்களும் நெய் தீபங்களாக ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது விரைவிலயே முருகனின் அருளை நம்மால் பெற முடியும். எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆறு பொருட்களையும் சூரசம்ஹார நாளன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆறு பொருட்களையும் வாங்க இயலாது என்பவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றையாவது வாங்கி வைத்து முருகப் பெருமானின் அருளை பெறலாம்.
இதையும் படிக்கலாமே: பணம் சேமிப்பாக உயர தேங்காய் பரிகாரம்
முருகப்பெருமானின் பரிபூரணமான அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாள் அன்று முருகப் பெருமானுக்கு பிடித்தமான இந்த பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.