
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு நமக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி சேர்த்து வைக்கக்கூடிய பணத்தை பலரும் இடம் பொருள் என்று முதலீடு செய்வார்கள். அப்படி முதலீடு செய்யக்கூடிய பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் தங்கம். பணத்தை கையில் வைத்துக்கொண்டு அதை என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்கள் தங்கத்தை வாங்குவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனால் தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு அதை வாங்குவதற்குரிய பணவரவு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே தெரியும். அப்படிப்பட்டவர்கள் தங்கத்தை வாங்குவதற்கும் அதை சேர்ப்பதற்கும் வாராகி அம்மனை வளர்பிறை பஞ்சமியில் வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உறவாக இருந்தாலும் அதனுடன் நமக்கு ஏதாவது ஒரு ஈர்ப்பு இருந்தால்தான் அது நம்மிடம் நிரந்தரமாக தங்கும். அந்த வகையில் பணம் நம்மிடம் சேர வேண்டும் அதிக அளவில் நம்மிடம் இருக்க வேண்டும் என்றால் பண வசியம் இருக்க வேண்டும். அதேபோல்தான் தங்கம் நம்மிடம் அதிக அளவில் சேர வேண்டும் என்றாலோ தங்கம் நிரந்தரமாக நம்மிடம் இருக்க வேண்டும் என்றாலோ தங்கத்தை நாம் வசியம் செய்ய வேண்டும். அப்படி தங்கத்தை வசியம் செய்வதற்கு நமக்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் வளர்பிறை பஞ்சமி திதி திகழ்கிறது. இந்த முறை வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி என்பது ஆசார நவராத்திரியுடன் சேர்ந்து வருவதால் இதற்கு கூடுதல் சிறப்பு உள்ளது.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:10 மணியிலிருந்து இரவு 10:10 மணிக்குள் ஏதாவது ஒரு ஒரு மணி நேரத்தை தேர்வு செய்து இந்த தீபத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் நாம் ஏற்ற வேண்டும். வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி படம் இல்லை என்பவர்கள் பூஜையறையில் பொதுவாக இந்த தீபத்தை ஏற்றலாம்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வாசனை நிறைந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த மலர்களுக்கு மேல் புதிதாக வாங்கிய ஐந்து அகல் விளக்குகளை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்குகளுக்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கில் இருக்கக்கூடிய முகப்பு அதாவது தீபம் ஏற்றுவோம் அல்லவா? அந்த பகுதி உள்புறம் இருப்பது போல் வட்ட வடிவில் வைக்க வேண்டும். பிறகு இதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட வேண்டும்.
இப்படி பஞ்சுத்திரி போடும் பொழுது இரண்டு பஞ்சுத்திரிகளை ஒன்றாக சேர்த்து போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொரு விளக்கிலும் வைத்துவிட்டு அந்த ஐந்த தீபங்களையும் வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக வாராகி அம்மனுக்கு பிடித்தமான மாதுளம் பழ முத்துக்களை தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு “ஓம் பஞ்சமி தாயே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை அந்த தீபச்சுடரொளியை பார்த்தவாறு கூற வேண்டும். அவ்வாறு கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த தீபம் சரியாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரம் கழித்து இந்த தீபத்தை நாம் குளிர வைத்துவிடலாம். இந்த முறையில் வளர்பிறை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நாம் தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு சொர்ணவசியம் ஏற்பட்டு அதிக அளவில் தங்கத்தை சேர்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் சதுர்த்தி தீபம்
பஞ்சமி தினத்தன்று பலரும் தங்கள் வீட்டில் ஐந்து தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்படி ஏற்றக்கூடிய தீபத்தில் இந்த சிறிய மாற்றத்தை செய்து ஏற்றும் பொழுது வாராகி அம்மனின் அருளால் சொர்ண வசியம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.