- Advertisement -
சமையல் குறிப்புகள்

இவ்வாறு மசாலா அரைத்து ஒரு முறை தேங்காய் பால் சாதம் செய்து பாருங்கள். தட்டு நிறைய கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்

- Advertisement -

ஒரு சில நாட்களில் தொடர்ந்து பண்டிகையாகவும், பூஜை, விழாக்களாகவும் இருக்கும். அப்பொழுது பூஜையில் படைத்த தேங்காய்கள் அதிகமாக வீட்டில் நிறைந்திருக்கும். இதுபோன்ற நேரங்களில் தேங்காயை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை வீணாகி விடும். எனவே தேங்காயை அதிகமாக உபயோகப் படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு வகை தான் தேங்காய் பால் சாதம். ஒவ்வொருவரும் கொஞ்சம் வித்தியாசமாக தேங்காய் சாதம் செய்வார்கள். ஆனால் மசாலா அரைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து செய்யும் இந்த உணவை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சூப்பரான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த தேங்காய் பால் மசாலா சாதத்தை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி – 3 டம்ளர், தேங்காய் – 1, எண்ணெய் – 150 கிராம், கேரட் – 1, பீன்ஸ் – 5, பச்சை பட்டாணி – 50 கிராம், பட்டை – சிறிய துண்டு, பிரிஞ்சி இலை – 2, ஸ்டார் பூ – 1, ஏலக்காய் – 2, கிராம்பு – 3, அன்னாசிப் பூ – சிறிதளவு, உப்பு – ஒன்றரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 6, இஞ்சி சிறிய துண்டு – 4, பூண்டு – 10 பல், கொத்தமல்லி – ஒரு கொத்து, புதினா – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் மூன்று டம்ளர் சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு வெங்காயம், பீன்ஸ், கேரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேங்காயை துருவி முதல் தேங்காய்ப்பால், இரண்டாம் தேங்காய்ப் பால் என எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும் என்னை நன்றாக காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்களளை சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். பிறகு ஊற்றிய தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து ஆறு டம்ளர் பதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து, அதனுடன் 11/2 ஸ்பூன் உப்பு மற்றும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.

சிறிது நேரத்தில் குக்கரில் இருந்து பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 7 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியை திறந்து ஒரு முறை கலந்துவிட்டு பரிமாறிக் கொடுத்தால் போதும். மிகவும் சுவையான தேங்காய் பால் சாதம் தயாராகிவிடும்.

- Advertisement -