- Advertisement -
சமையல் குறிப்புகள்

முதல் தடவை மோர் குழம்பு வைப்பவர்கள் மோர் திரியாமல் இருக்க இப்படி செஞ்சு பாருங்க! சுவையான மோர் குழம்பு எளிதாக செய்வது எப்படி?

- Advertisement -

முதல் தடவையாக மோர் குழம்பு செய்பவர்களுக்கு கண்டிப்பாக மோர் திரிந்து போய் விடுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஹோட்டல் சுவையில் அட்டகாசமான மோர் குழம்பு ரொம்பவே சுலபமாக காய்கறிகள் எதுவும் இல்லாமல் இந்த முறையில் செய்தால் கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் சுலபமாக மோர் குழம்பு செய்து விடலாம்! அசத்தலான சுவையில் எளிதான மோர் குழம்பு செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் – அரை லிட்டர், இஞ்சி + ஒரு சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, வர மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

மோர் குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் மோர் குழம்பு செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரை லிட்டர் தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக ஒரு முறை சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரெண்டு இன்ச் அளவிற்கு ஒரு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சீரகம், 2 காரமுள்ள மீடியம் சைஸ் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய் உங்கள் காலத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம். பின்னர் மிக்ஸியை இயக்கிய நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து எடுத்த இந்த விழுதையும் மோருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். மோர்க்குழம்பு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்தால் போதும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் வெந்தயம் கருகி விடாமல் தாளித்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள். வரமிளகாய் இரண்டை கில்லி சேர்த்து தாளித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் இருந்தால் 10 வெங்காயத்தை முழுதாக சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்.

வெங்காயத்துடன் தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் குழம்பிற்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் மோரை ஊற்றி ஒரு கொதி வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இடையிடையே அடிபிடிக்காமல் இருக்க கரண்டியைக் கொண்டு கிண்டி விடுங்கள். மிதமான தீயில் வைத்து இவ்வாறு செய்யும் பொழுது மோர் குழம்பு ரொம்ப ருசியாக, திரியாமல் அற்புதமாக வரும். இதே முறையில் நீங்களும் ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -