- Advertisement -
- Advertisement -

கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்து கொண்டு வருகின்றனர். முருகப் பெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் தீரும், திருமணம் விரைவில் நடைபெறும், சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று பலவிதமான பலன்களை கூறலாம். அந்த வகையில் ஆனி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தன்று எந்த முறையில் முருகனை வழிபாடு செய்ய காரிய தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்போம். அப்படி வெற்றியடைவதற்காக செய்யக்கூடிய காரியங்களில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் இருக்கும் பட்சத்திலோ அல்லது வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் தடைப்பட்டு கொண்டு இருக்கும் பட்சத்திலோ இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் போதும். விரைவிலேயே காரிய தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நினைத்தது போலவே நடந்திடும்.

- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாளன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் பரணி நட்சத்திர நாளன்று விரதம் இருக்க ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரம் முழுவதும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ விரதம் இருக்க இயலாவிட்டாலும் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இப்படி கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதலையும் முருகப்பெருமான் நிறைவேற்றுவார்.

அந்த வகையில் ஜூன் மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அன்று மாலை 5:30 மணியிலிருந்து இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை நாம் செய்தால் போதும். நம்முடைய வாழ்க்கையில் இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்று கூறலாம். இதற்காக நாம் தீபம் ஏற்ற வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று எதுவுமே கிடையாது. மிகவும் எளிமையான முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் 108 முறை எழுதினால் போதும்.

- Advertisement -

முதலில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கோடு போடாத வெள்ளை நிற பேப்பராக எடுத்து வடக்கு திசை பார்த்த அமர்ந்து கொண்டு அதில் சிவப்பு அல்லது பச்சை நிற மையால் எழுதக்கூடிய பேனாவை பயன்படுத்தி முருகப்பெருமானின் “ஓம் க்லீம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும். இவ்வாறு எழுதி முடித்த பிறகு உங்களுடைய எந்த காரியம் நடைபெறுவதில் தடைகள் இருக்கிறதோ அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்று முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எழுதிய இந்த பேப்பரை முருகப்பெருமானின் படத்திற்கு பின்புறம் வைத்து விட வேண்டும். காரியத்தடை நீங்கி நினைத்த காரியம் நினைத்தபடி நடந்த பிறகு இந்த பேப்பரை அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கூர்ம ஜெயந்தி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையை முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -