
தை மாதம் பிறந்து விட்டது. தைப்பொங்கலையும் சிறப்பாக கொண்டாடி விட்டோம். அந்த வரிசையில் அடுத்ததாக தை மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி திதி வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை 17-01-2025 இந்த சங்கடஹர சதுர்த்தி திதி வந்திருப்பதால், இந்த நாளில் விநாயகரை பின் சொல்லக்கூடிய முறையில் நாம் வழிபாடு செய்தால், நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
கடன் சுமை குறையும், காரிய தடை விளக்கும், கைக்கு வராமல் தடைப்பட்டு நிற்கும் பணம் கையை வந்து சேரும். செல்வ வளத்தில் நீங்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல, நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நாளை மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டை எப்படி செய்வது கோவிலுக்கு சென்ற விநாயகரை எப்படி வழிபாடு செய்வது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
நாளை மாலை பூஜை அறையில் விநாயகருக்கு கொஞ்சம் அருகம்புல் போட்டு சந்தன குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். விநாயகருக்கு முன்பாக எப்போதும் போல வீட்டில் ஏற்றக்கூடிய விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். அச்சு வெல்லம் இரண்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண மளிகை கடையிலேயே இந்த அச்சு வெல்லம் கிடைக்கும்.
சின்ன தட்டுக்கு மேல் இந்த அச்சு வெல்லத்தை நிற்க வைத்து, அதன் மேலே கொஞ்சம் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அச்சு வெல்லத்திற்கு மேலே கொஞ்சம் குறைவாக இடம் இருக்கும். அந்த இடத்தில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகரிடம் உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும், என்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் என்ன காரிய தடை பெருசாக இருக்கிறதோ அந்த காரியத்தடை விளக்கவும் பிரார்த்தனை வைக்கலாம்.
அந்த தீபம் மிக மிகக் குறைந்த நேரம் மட்டும்தான் எரியும். ஏனென்றால் பெருசாக வெல்லத்திற்கு நடுவே இடம் இருக்காது. இருக்கும் இடத்தில் தீபம் போட்டு அந்த குறைந்த நேரத்தில் மன நிறைவோடு விநாயகருக்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தீபம் ஏற்றி வைத்த சூட்டில் வெல்லம் லேசாக உருகும் அதுவும் தவறு கிடையாது.
அதேபோல இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று பிடி கொழுக்கட்டை அல்லது மோதகம் ஏதாவது ஒரு நெய்வேத்தியம் செய்து விநாயகருக்கு வைத்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பான பலனை கொடுக்கும். எல்லா வேண்டுதலையும் முடித்துவிட்டு இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த சீசனில் கரும்பு கிடைக்கும் ஒரு சின்ன துண்டு கரும்பு வாங்கி விநாயகருக்கு பக்கத்தில் வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. விநாயகருக்கு கரும்பு என்றால் ரொம்ப பிடிக்கும்.
இந்த பிடி கொழுக்கட்டையை, மோதகத்தை நாளைய தினம் உங்கள் கைகளால் நான்கு பேருக்கு தானம் கொடுத்தால் உங்களுடைய கடன் சுமை வெகு விரைவில் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நாளை மாலை வீட்டில் இந்த வழிபாட்டை முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று அங்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு இந்த கொழுக்கட்டையை தானமாக கொடுக்கலாம்.
ரொம்ப ரொம்ப நல்லது. நாளை மாலை கட்டாயம் விநாயகரது கோவிலுக்கு செல்ல வேண்டும். மண் அகல் விளக்கில் கோவிலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகரை வழிபாடு செய்து விநாயகருக்கு உங்களால் முடிந்த பூ பழம் அருகம்புல் இவைகளை வாங்கிக் கொடுத்து, விநாயகர் கொட்டு வைத்துக் கொண்டு தோப்பு கரணம் போட்டு, விநாயகரை மூன்று முறை வலம் வந்து, கட்டாயம் ஒரு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.
சிதறு தேங்காயை உடைக்கும் போது, விநாயகா என்னுடைய கடன் சுமையும் இதுபோல கண்ணுக்குத் தெரியாமல் சிதறி காணாமல் போக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக்கொண்டு, அப்படியே வீடு திரும்புங்கள். மேல் சொன்ன இந்த பரிகாரங்களை செய்தாலே உங்களுடைய கடன் சுமை குறையும். சரி வீட்டில் விளக்கு போட்ட அந்த வெல்லத்தை என்ன செய்வது.
இதையும் படிக்கலாமே: நாளை வெள்ளிக்கிழமையில் வரும், தை மாத சங்கடஹர சதுர்த்தி. செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல, விநாயகர் முன்பு இந்த 1 பொருளை வைத்து கும்பிட்டாலே போதும்.
தீபம் எரிந்து முடிந்ததும் வெள்ளிக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அந்த வெல்ல கட்டியை அந்த தண்ணீரில் போட்டு உங்கள் கையாலேயே கரைத்து விடுங்கள். என்னுடைய கடன் கரைந்து போக வேண்டும் விநாயகா என்று சொல்லிக் கொண்டே அந்த வெல்லத்தை கரைத்து விடுங்கள். இந்த தண்ணீரை செடி கொடிகளுக்கு அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடவும். இவ்வளவுதான் நாளைய தினம், நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து நல்ல பலனை பெறலாம்.