- Advertisement -
சமையல் குறிப்புகள்

தக்காளி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்

சாதம் என்றாலே ரசம் போட்டு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் அந்த அளவிற்கு நமக்கு பிடித்தது ரசம். ரசம் ஊற்றி சாப்பிட்டால் சீக்கிரம் ஜீரணம் அடையும் என்பதால் அனைவரும் மத்திய உணவில் ரசத்தினை சேர்த்து கொள்கின்றனர் . இந்த பதிவில் தக்காளி ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

தக்காளி ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 1/4 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
பச்சைமிளகாய் – 2
பெரும்காயம் – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
மிளகு சீரம் -1/2 ஸ்பூன்
தக்காளி -3
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
ரசப்பொடி – 2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

தக்காளி ரசம் செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நெய் சிறிதளவு சேர்க்கவும் பிறகு அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும். பிறகு அதில் நசுக்கிய பூண்டு மற்றும் நசுக்கிய பச்சைமிளகாய் போன்றவற்றை சேர்த்து எண்ணையில் வதக்கவும் .

- Advertisement -

பிறகு அதில் பெருங்காயம், கருவேப்பிலை, மிளகு சீரகம் மற்றும் தக்காளி சேர்த்து உப்பு போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு கொத்தமல்லி மற்றும் ரசப்பொடி சேர்த்து மீண்டும் நன்றாக வேகவிடவும்.

பிறகு அதில் ஊறவைத்த புளித்தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நுரைபொங்க கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தக்காளி ரசம் தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
குல்கந்து செய்வது எப்படி என்று பார்ப்போம்

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Thakkali rasam recipe in Tamil. It is also called as Thakkali rasam seimurai or Thakkali rasam seivathu eppadi in Tamil or Thakkali rasam preparation in Tamil.

- Advertisement -