குல்கந்து எப்படி செய்வது என்று பார்ப்போம்

kulkand

தூக்கமின்மை, அல்சர், வாய்ப்புண் மற்றும் வியர்வை நாற்றம், உடல் சூடு, இதயக்கோளாறு போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் ஒரு ஸ்பூன் குல்கந்து சாப்பிட்டால் போதும் அனைத்தும் நிவர்த்தி பெரும். அப்படிப்பட்ட குல்கந்தினை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

kulkand_1

குல்கந்து செய்ய தேவையான பொருட்கள்:

ரோஜா பூ – 1
பெரிய கற்கண்டு – 4 துண்டு
தேன் – தேவையான அளவு

குல்கந்து செய்முறை :

முதலில் ஒரு பெரிய ரோஜா பூ எடுத்து அதன் இதழ்களை பிரித்து நிழலில் காயவைக்கவும். பிறகு
அதனுடன் பெரிய கற்கண்டினை எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக லேகிய பக்குவத்திற்கு இடிக்கவும்.

kulkand_2

நன்றாக எடுத்து லேகிய பக்குவம் வந்ததும் அதனை ஒரு குடுவையில் போட்டு வைத்தால் குல்கந்து தயார். தினமும் அதனை சாப்பிடும் போது அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடவேண்டும் .

kulkand_3

பெரியவர்கள் சாப்பிட்டால் ஒரு ஸ்பூன், சிறியவர்கள் சாப்பிட்டால் 1/2 ஸ்பூன். குல்கந்து செய்முறை மிகவும் சுலபம் நல்ல பயனுடைய ஒன்று இந்த குல்கந்து.

kulkand_4

தயாரிக்கும் நேரம் – 5 நிமிடம்
அளவு – 1 பாட்டில்

இதையும் படிக்கலாமே:
முட்டை தொக்கு செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kulkand recipe in Tamil. It is also called as Kulkand seimurai or Kulkand seivathu eppadi in Tamil or Kulkand preparation in Tamil.