- Advertisement -
சமையல் குறிப்புகள்

இது வரைக்கும் தக்காளி சட்னியை இப்படி செஞ்சி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. ரொம்பவும் வித்தியாசமான முறையில் சூப்பரான இந்த சட்னி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி எல்லாத்துக்குமே பக்கா சைடு டிஷ்.

- Advertisement -

சட்னி வகைகளில் மற்ற சட்னிகளை விட, இந்த தக்காளி சட்னிக்கு எப்போதுமே கொஞ்சம் ருசி அதிகம் தான். வெங்காய சட்னி, கார சட்னி போன்ற இதர சட்னிகள் கூட ஒரு சிலருக்கு பிடிக்காது. இந்த தக்காளி சட்னியை பொருத்த வரையில் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான ஒன்று தான். இந்த தக்காளி சட்னியை இது வரை செய்திடாத வகையில் கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் நல்ல ருசியுடன் சூப்பராக எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 6, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), பூண்டு பல் – 10, மிளகாய் தூள் -1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், சர்க்கரை -1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி – 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது).

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான பேனை வைத்து கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஆறு தக்காளியையும் இரண்டாக நறுக்கி பேனில் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் லோ பிளேமில் வேக விடுங்கள். வேகும் போது இடையே தக்காளியை கிளறி விடக் கூடாது. அப்படியே மிதமான தீயில் தான் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு தக்காளியை தனியாக எடுத்து வைத்து ஆற விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

இப்போது மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து அதில் பேனை வைத்து மீதி இருக்கும் எண்ணையை ஊற்றி, அதில் பூண்டு பற்களை போட்டு நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து மிளகாய்த் தூளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது ஏற்கனவே வதக்கி வைத்த தக்காளி நன்றாக ஆறி இருக்கும். அதன் மேல் தோலை மட்டும் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்த பிறகு, வதக்கிய பூண்டு, மிளகாய்த்தூளை அதில் சேர்த்து இத்துடன் உப்பு, சர்க்கரையும் சேர்த்த பிறகு மத்து அல்லது மேஷர் வைத்து தக்காளியை நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுவையான பஞ்சு போல சாஃப்ட் தோசை உளுந்து இல்லாமல் எப்படி செய்வது? உளுந்து சேர்க்காமல் தோசை மாவு எப்படி அரைப்பதுன்னு தெரிஞ்சுக்குவோமா?

அவ்வளவு தான் தக்காளி சட்னி ரெடி. இதில் வெங்காயம் வதக்க வேண்டியதே இல்லை அப்படியே நேரடியாக சேர்க்க வேண்டியது தான். இந்த சட்னி வித்தியாசமான சுவையில், அதே நேரத்தில் சீக்கிரத்தில் செய்து முடிக்கும் வகையில் இருக்கும். நீங்களும் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -