உளுந்து இல்லாமல் தோசை மாவு அரைத்து இப்படை பஞ்சு போல தோசை செய்யலாம்

soft-dosa_tamil
- Advertisement -

உளுந்து இல்லாமல் தோசை மாவு | Ulundhu illamal dosai maavu

சுவையான பஞ்சு போல மெத்தென்ற தோசை எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். பொதுவாக தோசை மாவு உளுந்து சேர்த்து அரைத்தால் தான் நன்றாக வரும் ஆனால் இதில் உளுந்து எதுவும் நாம் சேர்க்கப் போவதில்லை! அதற்கு பதிலாக எந்த பொருளை சேர்க்க இருக்கிறோம்? எப்படி உளுந்து இல்லாமல் தோசை மாவு அரைத்து சுட சுட சுவையான தோசை வார்க்க போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி – அரிசி 11/2 கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், அரிசி பொரி – மூன்று கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

பஞ்சு போல சுவையான மெத்தென்ற தோசை சுடுவதற்கு முதலில் ஒன்றரை கப் அளவிற்கு இட்லி அரிசி தரமாக பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். இட்லி அரிசி ஊறுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் இவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டி இருக்கிறது. நான்கு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு ஒரு பெரிய மிக்ஸி ஜார் ஒன்று கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.

அரைத்து எடுத்து வந்த இந்த அரிசி மாவுடன் அரிசி பொரியை அரைத்து சேர்க்க வேண்டும். அரிசி பொரியை மூன்று கப் அளவிற்கு, அரிசி அளந்த அதே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதையும் நன்கு ஃபைன் பேஸ்ட் ஆக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனையும் அரிசி மாவுடன் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கைகளால் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மூடி போட்டு எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் ஊறிய பிறகு காலையில் எழுந்து பார்த்தால் இட்லி மாவு போலவே நன்கு புளித்து பொங்கி வந்திருக்கும். இந்த மாவை அதிகம் கிளறாமல் லேசாக மேலோட்டமாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ப்ரோக்கோலி பொரியல் செய்வது இவ்வளவு ஈசியா? இது தெரியாம இத்தனை நாள், இந்த காயை பார்த்தால் கூட வாங்காமல் விட்டுட்டோமே.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் தோசைக்கு எப்படி ரெண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி பரப்புவோமோ, அதே போல இரண்டு காரண்டி மாவை எடுத்து ஊற்றி தடிமனாக பரப்பிக் கொள்ளுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். தோசை வேகும் பொழுது மேலே முட்டை முட்டையாக அழகாக வெடிக்கும். பிறகு மறுபிறம் திருப்பி போட்டு சிவக்க வறுத்து எடுத்து பஞ்சு போல சாஃப்ட் ஆகணும். இந்த தோசை கூட கார சட்னி, கெட்டி தேங்காய் சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க.

- Advertisement -