- Advertisement -

தலையெழுத்து மாற செவ்வாய்க்கிழமை முருகன் மந்திரம்

- Advertisement -

நிறைய பேர், வாழ்க்கையில் புலம்புவது உண்டு. என்னுடைய தலையெழுத்தை எழுதும் போது மட்டும் இறைவன் தூங்கி விட்டானா, அல்லது இடது கையில் என் தலையெழுத்தை கிறுக்கி விட்டானா என்று தெரியவில்லை, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருகிறது. தாங்க முடியாத துன்பங்கள் துயரங்கள். ஒரு நல்ல வேலை இல்லை, வருமானம் இல்லை, வீட்டில் மரியாதை இல்லை.

சொந்த பந்தங்களோடு சந்தோஷமாக வாழும் வாய்ப்பு இல்லை. தலை நிமிர்ந்து வாழ முடியவில்லை. கடன் பிரச்சனை வறுமை. இந்த சூழலில் இருந்து விடுபட வேண்டும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் இப்படிப்பட்ட பலதரப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் மனிதனுக்கு விடுதலை கொடுக்க ஒருவரால் மட்டும் தான் முடியும். அவர்தான் கலியுகத்து கடவுள் முருகப்பெருமான்.

- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமை. வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்ய மறவாதீர்கள். நிச்சயம் உங்கள் தாறுமாறான தலை எழுத்து தரமானதாக மாறும். இன்றைய தினம் மாலை நேரத்தில் கோவிலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு விளக்கு போட்டு, அவருக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கிழமை முருகன் மந்திரம்

முருகனை ஆறு முறை வலம் வந்து முருகப்பெருமான் சன்னிதானத்தில் அமர்ந்து ‘ஓம் நமோ குமாராய நம’ என்ற இந்த ஒரு மந்திரத்தை 108 முறை ஆழ் மனதிற்குள் சொல்லுங்கள். கணக்கு வைப்பதற்கு சிரமமாக இருக்கிறதா கவலையே படாதீங்க. 5 நிமிடம், 10 நிமிடம் நேரத்தை ஒதுக்கி இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

கணக்கு என்பது நம்முடைய மனதிருப்திக்காகத்தான். எத்தனை முறை இந்த மந்திரத்தை இன்று உச்சரிக்கிறீர்களோ, அவ்வளவு கஷ்டங்கள் உங்களை விட்டு விலகி தூர சென்று விடும். தாறுமாறான உங்கள் தலை எழுத்து நல்லபடியாக மாறும். சூழ்நிலை சரியில்லை என்று பயப்பட வேண்டாம், நேரம் காலம் சரியில்லை என்று பயப்பட வேண்டாம், குடும்பத்தில் பிரச்சனை வேலையில் பிரச்சனை பணம் காசு இல்லை என்ற எந்த பயமும் தேவையில்லை.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை அஷ்டமி திதி பரிகாரம்

முருகனை சரணாகதி அடைந்து இன்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள். கோயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகப்பெருமான் முன்பு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து அமர்ந்து ‘எல்லாம் எனக்கு நல்லதை மட்டும் தான் முருகன் செய்வான்’ என்று நம்பி இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு நிச்சயம் தலையெழுத்து மாறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -