
இன்று தங்கம் விற்கும் விலைக்கு நம்மால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது. இருந்தாலும் பெண்ணிற்கு திருமணம் வைத்திருக்கின்றோம். தாலிக்கு தங்கம் வாங்க வேண்டும், குழந்தைகளுக்கு காதுகுத்து வைக்கின்றோம், காது குத்த நிச்சயம் தங்கம் வாங்க வேண்டும். இப்படிப்பட்ட அத்தியாவசியமான இந்த தேவைகளுக்கு எல்லாம் நம்முடைய சாஸ்திரப்படி கட்டாயம் கொஞ்சமாவது தங்கம் தேவைப்படும்.
இதற்காகவாவது எனக்கு தங்கம் வாங்கும் யோகம் வர வேண்டும். தங்கம் ஒரு பவுன், ஒரு லட்ச ரூபாயாகவே விற்றாலும் சரி, அந்த தங்கத்தை வாங்கக் கூடிய யோகத்தை நாம் பெற்றுவிட்டால் போதும். தங்கம் தானாக நம் வீடு தேடி வரும். புதுசாக தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தினமும் இந்த முறையில் சாமி கும்பிடுங்கள்.
எங்ககிட்ட ஏற்கனவே தங்கம் இருக்கு. ஆனா அது அடமானக் கடையில் அடமானத்தில் இருக்கிறது. அதை எப்படியாவது மீட்டுக் கொண்டு வர பணம் தேவை என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். மிக மிக எளிமையான பரிகாரம் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. தங்கத்தை உங்களோடு தங்க வைக்கக்கூடிய பரிகாரம்.
ஆனால் இந்த பரிகாரத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு சின்ன குண்டுமணி தங்கம் ஆவது தேவை. ஒரு மூக்குத்தி தங்கத்தில் இருந்தால் கூட சரி. அதை வைத்து இந்த பரிகாரத்தை நிறைவாக செய்யலாம். பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை நிற விரிப்பு விரித்து, அதன் உள்ளே பச்சரிசியை போட்டுக் கொள்ளுங்கள்.
அந்த பச்சரிசிக்கு மேலே உங்கள் வீட்டில் இருக்கும் குண்டுமணி தங்கத்தை வையுங்கள். தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றி அந்த தங்கத்தை பார்த்து கொண்டே மகாலட்சுமியிடம், தங்கம் எனக்கு மேலும் மேலும் சேர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். அப்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா. அந்த மகாலட்சுமியின் அம்சத்தோடு இருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. குளித்துவிட்டு, வாசனை நிறைந்த பூக்களை வைத்துக் கொண்டு, அழகாக ஆடை உடுத்திக் கொண்டு, உங்கள் மேலே நன்றாக வாசம் அடிக்கும்படி ஒரு வாசனை திரவியத்தை போட்டுக் கொண்டு, மருதாணி இட்ட கைகளோடு, இந்த பூஜையை செய்தால் 48 நாட்களில் ஏதாவது ஒரு ரூபத்தில் தங்கம் உங்களை வந்து சேரும்.
48 நாள் தொடர்ந்து எங்களால் இந்த வழிபாட்டை செய்ய முடியாது. என்றால் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் தங்கம் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அடமானத்தில் தங்கம் வைத்திருந்தாலும் அந்த தங்கம் மீண்டும் உங்கள் வீட்டிற்குள் வந்து சேரும். தங்கத்தின் காரகத்துவம் குரு சுக்கிரன்.
எந்த இடம் அழகாக இருக்கிறதோ, எந்த இடம் வாசமாக இருக்கிறதோ, எந்த இடத்தில் மங்களகரம் நிறைவாக இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் குருவும் சுக்கிர பகவானும் தானாக தன் வேலையை செய்ய துவங்கி விடுவார்கள். தங்கம் வாங்க எளிமையான சூட்சமம் இதுதான். வழிபாடு முடியும் வரை அந்த பச்சரிசியும் தங்கத்தையும் பூஜை அறையில் இருந்து எடுக்கக் கூடாது.
இதையும் படிக்கலாமே: புத்திர பாக்கியம் உண்டாக செய்ய வேண்டிய தானம்
குறிப்பிட்ட நாள் பரிகாரத்தை முடித்துவிட்டு பச்சரிசியை எடுத்து ஊறவைத்து பசுமாட்டிற்கு கொடுக்கவும். தங்கத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.