- Advertisement -

தீராத கஷ்டங்களைப் போக்கும் தைப்பூசம்

- Advertisement -

தைப்பூசம் என்பது சிவபெருமான், பார்வதி மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது என்றாலும் அதிகப்படியாக அனைத்து விதமான முருகன் ஆலயங்களிலும் தைப்பூசத்தை திருவிழா போல் நாம் கொண்டாடுகிறோம். தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளன்று பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதோடு தங்களுடைய பிரச்சனைக்கு ஏற்றவாறு எந்த பொருளை வாங்கி முருகன் ஆலயத்திற்கு தந்தால் அந்த பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தீராத கஷ்டங்களைப் போக்கும் தைப்பூசம்

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளை தான் நாம் தைப்பூசம் என்று கொண்டாடுகிறோம். தைப்பூச நாளன்று முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலையும் நேர்த்திக்கடனையும் செலுத்தி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் என்பது இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீருவதற்காகவும் வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதோடு எந்தெந்த பொருட்களை முருகப்பெருமானுக்கு வாங்கித் தர வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தைப்பூச திருநாள் அன்று முருகப் பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேலை வாங்கி முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு ஆலய உண்டியலில் வேலை போடுவதன் மூலம் நாட்பட்ட தீராத கடன் பிரச்சனையும் தீரும். முருகப்பெருமானின் அபிஷேகத்திற்காக அன்றைய தினம் பால் வாங்கிக் கொடுத்தோம் என்றால் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும்.

முருகப்பெருமானுக்கு அலங்காரத்திற்காகவும் அர்ச்சனைக்காகவும் வாசனை மிகுந்த மலர்களை வாங்கித் தந்தோம் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி சுப காரியங்கள் சிறப்பாக நடைபெறும். முருகப்பெருமானின் ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்காக எண்ணெய் வாங்கிக் கொடுத்தோம் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும்.

- Advertisement -

இந்த பொருட்களை பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்திற்கு தான் வாங்கி தர வேண்டும் என்று இல்லை. நம்முடைய வீட்டிற்கு அருகிலேயே இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கும் வாங்கித் தரலாம். முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து இந்த பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதன் மூலம் அந்த பொருட்களுக்குரிய பலனை நம்மால் பெற முடியும். இதோடு அன்றைய தினம் ஆலயத்திற்கு வரக்கூடிய முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என்பது கோடி புண்ணியத்தை தரும். அன்னதானம் வழங்கும் அளவிற்கு வசதி இல்லை என்று கூறுபவர்கள் அவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு மோர் தானம் தந்தாலும் அன்னதானம் செய்ததற்குரிய பலனை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:கோடீஸ்வர யோகம் தரும் தைப்பூச தீபம்

அதிக அளவில் அனைத்து பொருட்களையும் வாங்கித் தர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு ரூபத்தில் தைப்பூச திருநாள் அன்று முருகப்பெருமானுக்கு இந்த பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்து முருகப் பெருமானின் அருளை பெறலாம். ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானை வழிபாடு செய்து முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -