
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய காலத்தில் ஆலயத்தை பூட்டிவிட்டு அதன் சாவியை காலபைரவரின் சன்னதியில் தான் வைத்துவிட்டு செல்வார்களாம். யாராவது ஒருவர் தவறான நோக்கத்துடன் அந்த சாவியை நெருங்கும் பொழுது அவர்களுக்கு காலபைரவர் தண்டனை தருவார் என்று புராணங்களில் கூறப்பட்டு வருகிறது. இன்றளவும் பழமை வாய்ந்த பல கோவில்களில் சாவியை பைரவரின் பாதத்தில் வைத்து விட்டு தான் எடுத்துச் செல்கிறார்கள் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட காவல் தெய்வம் நம்முடைய வீட்டிற்கும் காவலாக இருந்து நம் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் அணுகாமல் இருக்க ஒரு பாதுகாப்பு கவசமாக திகழ வேண்டும் என்றால் இந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தை செய்தால் போதும். அந்த தாந்திரீக பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
காலபைரவரை உக்கிர தெய்வங்களில் ஒருவராக கூறுவது உண்டு. காலபைரவரை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்கள் தரக்கூடிய அனைத்து விதமான விஷயங்களையும் நாம் வாழ்க்கையில் இருந்து விலக்கிவிடுவார் என்று கூறலாம். அது நேரடியான எதிரிகளாக இருந்தாலும் சரி, மறைமுகமான எதிரிகளாக இருந்தாலும் சரி, நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களாக இருந்தாலும் சரி, நம்முடைய கஷ்டங்களாக இருந்தாலும் சரி, தீய சக்திகள் எதிர்மறை ஆற்றல்கள் என்று எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கிவிடுவார். அப்படிப்பட்ட காலபைரவரை நினைத்து செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த தாந்திரீக பரிகாரத்தை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கச் செல்வதற்கு முன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு விபூதி, குங்குமம் மற்றும் பன்னீர் வேண்டும். வேறு எதுவும் தேவை இல்லை. பொதுவாகவே ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று நம்முடைய நிலை வாசலை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இதோடு சேர்த்து இந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தையும் செய்யும் பொழுது காலபைரவர் நம்முடைய வீட்டிற்கு பாதுகாப்பு கவசம் ஆகவே மாறிவிடுவார்.
கையில் சிறிதளவு விபூதியையும் சிறிதளவு குங்குமத்தையும் எடுத்து கலந்து கொள்ளுங்கள். இதில் பன்னீரை ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது கால பைரவருடைய நாமத்தை கூறிக் கொண்டே செய்ய வேண்டும். நமக்கு எந்த நாமம் தெரிந்தாலும் அந்த நாமத்தை கூறிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் “பைரவாய நமஹ” என்ற எளிமையான மந்திரத்தை கூட கூறிக் கொண்டே இதை நாம் செய்யலாம். இப்பொழுது நாம் கையில் குழைத்த இந்த விபூதி குங்குமத்தை அப்படியே நம்முடைய வீட்டு நிலை வாசலின் 2 புறங்களிலும் பட்டை அடிப்பது போல் தடவி விட வேண்டும்.
இப்படி தடவும் பொழுதும் “பைரவாய நமஹ” என்று கூறிக் கொண்டேதான் தடவ வேண்டும். இப்படி செய்துவிட்டு எப்பொழுதும் போல் நிறைவாசலுக்கு சாம்பிராணி தூபம் காட்டி வழிபட வேண்டும். இப்படி நாம் ஒவ்வொரு வாரமும் செய்வதன் மூலம் காலபைரவர் நம்முடைய வீட்டிற்கு பாதுகாப்பு கவசமாக இருந்து நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதோடு எந்த வித தீய சக்திகளும் வீட்டிற்குள் வராமல் பாதுகாப்பார்.
இதையும் படிக்கலாமே: ராகு தோஷ துர்க்கை வழிபாடு
எளிமையான பரிகாரமாக தெரிந்தாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் கால பைரவர் நமக்கு என்றென்றும் பாதுகாவலராக இருப்பார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.