
ஒவ்வொருவருடைய மனதிலும், ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் வேண்டுதல்களாக வைக்கப்படுகின்றன. எல்லா வேண்டுதல்களும் உடனே பலிப்பது கிடையாது. முருகனுக்கு இந்த ஒரு வேண்டுதல் வைக்கும் பொழுது, வேண்டியது 7 நாட்களில் நிறைவேறுவதாக பக்தர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த எளிய முருக வழிபாடு எப்படி செய்வது? என்னும் தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக இருக்கக் கூடியவர் முருகப் பெருமான். முருகப் பெருமானை நம்பியோர் யாரும் கைவிடப்படுவது கிடையாது. ஒளி பொருந்திய மாசற்ற கந்தனுடைய சன்னதியை பார்த்து கை கூப்பி வழிபடுபவர்களுக்கு வலியெல்லாம் பறக்கும். உங்களுடைய மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவது தான் அவருடைய முழுமுதற் வேலையாக இருக்கிறது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய ஆசைகளில் ஒன்று நீண்டகாலமாக நிறைவேறாமலே தள்ளி சென்று கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு வேண்டுதலை முருகப்பெருமானை நினைத்து வேண்டி இந்த ஒரு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வருவதன் மூலம் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏதாவது ஒரு வேண்டுதலை மட்டும் மனதில் வைத்து மாவிளக்கு ஏற்ற வருகிறேன் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து ஏழு நாட்கள் தவறாது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். எனவே ஏழு நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முடியுமா? என்பதை திட்டமிட்டு அதன் பிறகு துவங்குங்கள். தேனும், தினையும் கலந்து மாவிளக்கு செய்ய வேண்டும். தினை மாவு கடையில் வாங்கினாலும் சரி அல்லது தினையை வாங்கி லேசாக வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவுடன் தேவைக்கு ஏற்ப சுத்தமான தேனை சேர்க்க வேண்டும். பின்பு கெட்டியாக பிசைந்து விளக்கு போல செய்து அதில் ஒற்றை திரி போட வேண்டும்.
மனதில் ஒரே ஒரு ஆசையை மட்டும் வேரூன்றி விதைத்து அதை நிறைவேற வேண்டும் என்று அடம்பிடியுங்கள். முருகனுடைய சன்னதிக்குச் சென்று இந்த தினையும், தேனும் கலந்த மாவிளக்கை வைத்து தீபம் ஏற்றுங்கள். இது போல தொடர்ந்து ஏழு நாட்களும் புதிதாக மாவிளக்கு செய்து தீபம் ஏற்றி முருகனை மனதார வழிபட வேண்டும். தேனும் தினையும் கலந்து மாவிளக்கு போடும் பொழுது முருகனே நேரில் வந்து அருள் புரிவதாக ஒரு ஐதீகம் உண்டு.
இதையும் படிக்கலாமே:
முன்வினை பாவம் தீர்க்கும் நாகலிங்க பூ
கேட்கப்படாத வேண்டுதல்கள், நிறைவேறப்படாத பிரார்த்தனைகள், பலிக்காத ஆசைகள் அத்தனையும் ஏழு நாட்கள் நீங்கள் இந்த தீபத்தை ஏற்றி முடிக்கும் பொழுது நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. ரொம்பவே எளிய இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அறுபடை வீடுகளில் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். முருகனுடைய அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கக் கூடிய ஏதாவது ஒரு கோவிலில் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வழிபாடலாம் அல்லது பழங்கால முருகன் கோவில்களிலும், சக்தி வாய்ந்த முறையாக திருப்பணி செய்யப்படும் கோவில்களிலும் இந்த பிரார்த்தனையை வேண்டி வையுங்கள். தீராத கடன் பிரச்சனைகள், தீராத பிணிகள், நோய் நொடிகள் எதுவாக இருந்தாலும் இந்த ஏழு நாட்கள் மாவிளக்கு போட்டால் நிச்சயம் குணமாகும். திருமணத்தடை, குழந்தை பாக்கிய தடை, தொழில் முன்னேற்றம், சொத்து தகராறுகள் என்று எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் இந்த பரிகாரம் சிறந்த தீர்வை தரும்.