- Advertisement -
சமையல் குறிப்புகள்

தின்ன தின்ன திகட்டாத தித்திக்கும் லட்டு. இந்த லட்டுவை தினமும் 1 சாப்பிட்டால் திரும்பிப் பார்ப்பதற்குள் முடி, முட்டி கால் வரை வளர்ந்து விடும்.

- Advertisement -

தினை லட்டு செய்வது எப்படி

இங்கே நாம் பார்க்கப் போகும் ரெசிபி தினை லட்டு ரெசிபி. தினையில் பீட்டா கரோட்டின் சத்து அதிகமாக இருக்கிறது. இந்த தினையை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் இந்த தினை லட்டு செய்ய நாம் வேர்கடலையை சேர்க்கப் போகின்றோம். அதுவும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் தான். குழந்தைகளுக்கு இந்த சிறுதானியத்தை இனிப்பு சேர்த்து இப்படி லட்டுவாக பிடித்துக் கொடுத்தால் தினமும் ஒன்று அடம்பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். உடலுக்கு தேவையான சத்து சுலபமாக கிடைத்துவிடும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ஆரோக்கியமான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

தினை லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

திணை 1 கப், வேர்க்கடலை 1/2 கப், வெல்லம் 1 கப், ஏலக்காய் 5, நெய் 1 டேபிள், இந்த பொருட்கள் இருந்தாலே திணை லட்டுவை சுவையாக செய்துவிடலாம்.

- Advertisement -

தினை லட்டு செய்முறை:

தினை மாவாக வாங்காமல் முழுசாக இருக்கும் தினை சிறுதானியத்தை அப்படியே வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்கி இரண்டு மூன்று முறை தண்ணீரை ஊற்றி நன்றாக அலசி, தண்ணீரை வடிகட்டி இந்த தினையை ஒரு வெள்ளைத் துணியில் பரவலாக போட்டு வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். 1 மணி நேரம் காய வைத்தால் போதும். ஃபேன் காற்றில் என்றால் 2 மணி நேரம் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள்.

காய்ந்த இந்த தினையை வறுத்தெடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தினையைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். தினை சிவந்து வாசம் வரும்போது, இதனுடன் வேர்க்கடலையை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த வேர்க்கடலை ஆக இருந்தாலும் இந்த தினையோடு போட்டு அதை லேசாக மொறுமொறுப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது வருத்தத் தினை, வறுத்த வேர்க்கடலை இந்த இரண்டு பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ஏலக்காய் போட்டு, நைசாக அரைத்து கொள்ளுங்கள். இதோடு வெல்லத்தை நன்றாக தூள் செய்து போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் வெல்லமும் அரைபட்ட திணை வேர்க்கடலை எல்லாம் கலந்து நமக்கு கிடைத்துவிடும். இதை அப்படியே ஒரு தட்டில் கொட்டி உங்கள் கையில் கொஞ்சமாக நெய் தடவி சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொண்டால் தினை லட்டு தயார்.

இதையும் படிக்கலாமே: காரசாரமா ஆந்திரா ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு காரப்பொடி இப்படி அரச்சு பாருங்க. சுடச்சுட வடித்த குண்டான் சாதமும் வீட்டில் இருப்பவர்களுக்கு பத்தவே பத்தாது.

தேவைப்பட்டால் இதில் முந்திரி பாதாம் பிஸ்தா இவைகளை பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இதை காற்று புகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் பல நாட்கள் வைத்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. தினமும் ஒரு லட்டு என்று வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுங்க. குழந்தைகளுக்கு அவசியம் கொடுங்க. அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு இது ரொம்ப ரொம்ப நல்லது. ரெசிபி பிடிச்சிருந்தா உடனே முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -