காரசாரமா ஆந்திரா ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு காரப்பொடி இப்படி அரச்சு பாருங்க. சுடச்சுட வடித்த குண்டான் சாதமும் வீட்டில் இருப்பவர்களுக்கு பத்தவே பத்தாது.

karuvepilai-podi_tamil
- Advertisement -

கருவேப்பிலை பூண்டு பொடி செய்வது எப்படி

வடித்த சுடச்சுட சாதத்தோடு இந்த கருவேப்பிலை பூண்டு பொடியை போட்டு கொஞ்சமாக நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை மனமாக இருக்கும். இட்லி தோசை இவைகளுக்கு கூட இந்த பொடியை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி கலந்து தொட்டு சாப்பிடலாம். இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள், தலைமுடி உதிர்வு உள்ளவர்கள், இந்த பொடியை சாப்பிடலாம். இதில் நாம் பூண்டு சேர்க்கப் போவதால் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் குறையும். சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ரொம்ப ரொம்ப நல்லது. இப்படி அரைத்து வைத்த பொடி ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் இந்த அருமையான ஆந்திரா பொடி ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

கருவேப்பிலை பூண்டு பொடி செய்முறை:

முதலில் இரண்டு கைப்பிடி அளவு பச்சையாக இளசாக இருக்கும் கருவேப்பிலைகளை கழுவி, தண்ணீரை வடிய வைத்து ஒரு வெள்ளை துணியில் போட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது. பச்சை கருவேப்பிலையில் இந்த பொடி செய்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். காய்ந்த கருவேப்பிலைகள் இருந்தாலும் அதை பயன்படுத்தியும் இந்த பொடி செய்யலாம் தவறு கிடையாது.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், போட்டு முதலில் இதை வறுக்க வேண்டும். லேசாக இந்த இரண்டு பருப்புகளும் நிறம் மாறி வரும்போது வெந்தயம் – 1 சிட்டிகை, வர மல்லி – 4 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு மீண்டும் வறுக்க தொடங்குங்கள். (இது ஆந்திரா ரெசிபி என்பதால் வர மல்லி, வாசம் கொஞ்சம் தூக்கமாக இருக்கும். உங்களுக்கு அந்த வாசம் பிடிக்கவில்லை என்றால் அதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.)

இப்போது கடாயில் சேர்த்திருக்கும் எல்லா ஜாமான்களும் முக்கால் பாகம் வறுபட்டு வந்தவுடன், வர மிளகாய் – 12 இலிருந்து 15, போட்டு ஒரு நிமிடம் போல வறுத்து விட்டு, ஈரம் இல்லாமல் எடுத்து வைத்திருக்கும் கருவேப்பிலைகளையும் இதில் போட்டு நன்றாக வறுக்க தொடங்குங்கள். கருவேப்பிலையும்  மொறுமொறுப்பாக வறுபட வேண்டும். இறுதியாக நாம் சேர்த்திருக்கும் மற்ற மசாலா பொருட்களும் சரியான பக்குவத்தில் வறுபட்டு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பை அணைத்துவிட்டு இந்த பொருட்களை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்து விட வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு இந்த எல்லா பொருட்களையும் போட்டு மொத்தமாக வறுக்க வராது. சில பொருட்கள் கருகிவிடும் என்றால் தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். ஆறிய இந்த எல்லா பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடிக்கு தேவையான அளவு – உப்பு போட்டு, பெரிய நெல்லிக்காய் அளவு – புளியை, சின்ன சின்னதாக கிள்ளி போட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக இதில் 15 பல் பூண்டு தோலுடன் போட்டு அப்படியே இரண்டு ஓட்டு ஓட்டினால் பூண்டு ஒன்றும் இரண்டுமாக அரைபட்டு உங்களுக்கு கிடைக்கும். அதாவது ரொம்பவும் பெருசு பெருசா பூண்டு இருக்கக் கூடாது. அதற்காக ரொம்பவும் அரைத்து விடக்கூடாது. ஓரளவுக்கு கொரகொரப்பாக இதை அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஒரு மாதத்திற்கு பிரிட்ஜில் வைக்காமலேயே இந்த பொடி நன்றாக இருக்கும்.

அதற்கு மேல் வெளியில் வைத்தால் லேசாக பொடி சிக்கு வாடை அடிக்கும். ஏன் என்றால் எண்ணெய் விட்டு தான் மசாலா பொருட்களை அரைத்து இருக்கின்றோம். ஒரு மாதத்திற்கு பின்பு பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்து சாப்பிட்டு கொள்ளலாம். சுடச்சுட சாதம் இந்த பொடி கொஞ்சமாக நெய் அமிர்தம் போல இருக்கும் செய்து ருசித்துப் பாருங்கள்.

- Advertisement -