- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இஷ்ட தெய்வங்கள் இருக்கும். என்னதான் குலதெய்வமும், இஷ்ட தெய்வமும் இருந்தாலும் சில பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். இன்னும் சிலருக்கோ அவர்கள் ஜாதக ரீதியாக இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பலரும் சொல்ல கேள்வி பட்டு தங்களுடைய வாழ்க்கை நிலை மாறுவதற்காக பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் திருச்செந்தூர் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு சூட்சமமான வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நினைத்தது நிறைவேற சூட்சம வழிமுறை

ஒவ்வொரு கோவில்களுக்கு செல்லும் பொழுதும் அங்கு இருக்கக்கூடிய தெய்வத்திற்கு ஏற்றவாறு நம்முடைய வழிபாட்டு முறையும் மாறுபடும். அதேபோல் நாம் வாங்கிக் கொடுக்கும் பொருட்களும் மாறுபடும். இதோடு மட்டுமல்லாமல் இன்னும் சில ஆலயங்களுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த முறையில் தான் திருச்செந்தூர் செல்லும் பொழுது மேற்கொள்ள வேண்டிய வழிமுறையை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், திருமணம் விரைவில் நடைபெற வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும், குடும்பத்தில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பல வேண்டுதல்களும் கோரிக்கைகளும் ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்யும். இந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் செல்வோம். அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழக்கூடியது தான் திருச்செந்தூர் முருகன் கோவில்.

திருச்செந்தூருக்கு அருகில் இருப்பவர்கள் வாரம் தோறும், தினமும் கூட செல்பவர்கள். சில பேர் வருடத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை, விசேஷமான நாட்கள் செல்வார்கள். எப்படி நீங்கள் செல்வதாக இருந்தாலும் இந்த எளிமையான வழிமுறையை பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் என்ன நினைத்து செல்கிறீர்களோ அது கண்டிப்பான முறையில் நிறைவேறும்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் நம்முடைய இல்லத்தில் இருக்கக்கூடிய முருகனுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து உன்னை காண வர எனக்கு ஆசையாக இருக்கிறது அதற்குரிய வழியை காட்டு என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். 11 நாட்களோ, 21 நாட்களோ தங்களால் இயன்ற அளவு அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

இப்படி விரதம் இருந்து திருச்செந்தூருக்கு செல்பவர்கள் கண்டிப்பான முறையில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் பார்க்குமாறு செல்ல வேண்டும். முதல் நாள் சென்று இரவு தங்கி காலையில் எழுந்து நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்யலாம். அப்படி இல்லை என்றால் வியாழக்கிழமை காலை சென்று கூட நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.

- Advertisement -

நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. காரணம் இந்த ஸ்தலமானது குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. குருபகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது வியாழக்கிழமை. அதிலும் குறிப்பாக குரு ஹோரையில் சுவாமியை தரிசனம் செய்வது என்பது மிகவும் சிறப்பு.

வியாழக்கிழமை குருஹோரையானது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் இருக்கும். இந்த நேரத்தில் குருபகவானையும் முருகப்பெருமானையும் தரிசனம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நாம் நினைத்தது நடக்கும்.

இதோடு மட்டும் அல்லாமல் குருபகவானுக்குரிய நிறமாக கருதப்படக் கூடிய மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வழிபட்டு சுவாமியிடம் நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நமக்கு அருள்வார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏகாதசி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை பின்பற்றி திருச்செந்தூர் முருகனை நாம் தரிசனம் செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்

- Advertisement -