- Advertisement -
- Advertisement -

வாஸ்து படி ஒரு வீடு சரியாக அமைந்திருந்தால் பிரச்சனைகள் குறைவு. வாஸ்து தடைகள் இருந்தால் அதற்கேற்ற பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தின் பூமியில் சரியான அளவில் வெப்பம், குளிர், காற்று அனைத்தும் இருப்பதால் தான் நாம் நிம்மதியாக இங்கு வாழ முடிகிறது. அது போல தான் நம்முடைய வீடும்! வீட்டில் அனைத்து திசைகளும் சரியாக அமைக்கப் பெற்றிருந்தால் நிம்மதியாக இருக்க முடியும். அந்த வகையில் திருமண தடை ஏற்படுவதற்கு என்ன மாதிரியான வாஸ்து பிரச்சனைகள் வீட்டில் இருக்கக் கூடும்? என்னும் வாஸ்து சார்ந்த தகவலை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

வாஸ்து ரீதியாக வீட்டில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருந்தால் தான் பண வளம் சிறக்கும். காற்றோட்டம் குறைவாகவும், வெளிச்சம் குறைவாகவும் இருக்கும் இல்லத்தில் பணத்தடை கண்டிப்பாக இருக்கும். ஜன்னல்கள், கதவுகளை எப்பொழுதும் மூடி வைத்து இருக்கக் கூடாது. சூரிய ஒளி வீட்டிற்குள் வர வேண்டும். வீட்டின் அமைப்பு பிரச்சனைக்குரியதாக இருக்கக் கூடாது. வீட்டை சுற்றிலும் பசுமையான மரம், செடிகளை வளர்க்க வேண்டும். இதுவும் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -

திருமண தடைகள் இருந்தால் வீட்டில் முதலில் வடகிழக்கு பகுதியை சரிப்பாருங்கள். வடகிழக்கு பகுதியில் கழிவறை அல்லது பூஜை அறை அமைந்திருக்கக் கூடாது. அப்படி அமைந்திருந்தால் கண்டிப்பாக அதனை மாற்றி அமைக்க வேண்டும். அது போல அந்த பகுதி நீண்டு போய் இருக்கக் கூடாது. சரியான அளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் இந்த பிரச்சனைகள் இருந்தால், குடும்பத்தில் இருக்கும் ஆண் வாரிசுக்கு திருமண தடைகள் ஏற்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

அதே போல பெண் வாரிசுக்கு திருமண தடைகள் இருந்தால் அந்த வீட்டின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியை சரி பார்க்க வேண்டும். தென்கிழக்கு பகுதியில் படுக்கை அறை அமைந்திருக்கக் கூடாது. கிழக்கு பகுதியில் அதே போல கழிவறை அமைந்திருக்கக் கூடாது. கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இந்த அமைப்பு இருந்தால் கண்டிப்பாக அதனை மாற்றி அமைக்க வேண்டும் . இல்லாவிடில் அந்த வீட்டில் பெண் வாரிசுகளுக்கு திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

- Advertisement -

திருமணத்தில் தடைகள் ஏற்படவும், திருமண பிரச்சனைகள் தொடர்ந்து சந்திக்கவும் இந்த வாஸ்து முறை அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். சிலருக்கு சரியான வேலை கூட அமையாமல் போகும், அதனால் திருமணம் தள்ளிச் செல்லும். திருமணத்தில் விருப்பமில்லாமலும் சிலருக்கு இருக்கும். திருமண பேச்சு எடுத்தாலே பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். திருமணமே வேண்டாம் என்று சிலர் தட்டி கழிப்பார்கள். இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் வீட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாஸ்து பிரச்சனைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை சரியான வாஸ்து நிபுணர்களை கலந்தாலோசித்து சரி செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
குழந்தைகள் கல்வி அறிவில் சிறந்து விளங்க

இப்படி எந்த விதமான வாஸ்து பிரச்சனைகளும் இல்லை எனும் பட்சத்தில் நீங்கள் மற்ற பரிகாரங்களை நாடுங்கள். முதலில் வாஸ்துவை முழுமைப்படுத்துங்கள். வாஸ்து உங்கள் மகன் அல்லது மகளின் எதிர்காலத்திற்கு நல்ல தேர்வை கொடுக்க, இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -