ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். எந்த செல்வத்தை வேண்டுமானாலும் அபகரிக்க முடியும், ஆனால் கல்வி என்ற செல்வத்தை அபகரிக்க முடியாது என்று அன்றைய காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்வி அறிவைப் பெறுவதற்கு பல குழந்தைகளால் முடியாத சூழ்நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளும் நன்றாக படித்து சிறந்த கல்வி அறிவைப் பெறுவதற்கு செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குழந்தைகள் கல்வி அறிவில் சிறந்து விளங்க
குலதெய்வ அருள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குலதெய்வத்தை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அப்படி வழிபாடு செய்தால் தான் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். தினமும் குலதெய்வ கோயிலுக்கு செல்ல இயலாது என்றாலும் அனுதினமும் நம்முடைய வீட்டில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள் என்று இப்பொழுது பார்ப்போம்.
ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் இருந்தால் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடைபெறும். வீட்டில் எந்தவித காரிய தடைகளும் இருக்காது. சிறப்பான முறையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருப்பார்கள். எதிர்மறை ஆற்றல்களால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. இப்படி நாம் கூறிக் கொண்டே செல்லலாம். குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்கென்று சிறப்பான நாட்கள் பல இருந்தாலும் அனுதினமும் நம் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். நம்முடைய பிரச்சினைக்கு ஏற்றார் போல் குலதெய்வத்தை அந்த பிரச்சனைக்குரிய நாளில் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை, என்ன செய்தாலும் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள் என்னும் பட்சத்தில் அவர்கள் ஆர்வத்துடன் படிப்பதற்கும் சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கும் நாம் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை திதியில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மாலை நேரத்தில் அதாவது அமாவாசை திதி இருக்கக்கூடிய மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு வீட்டில் குலதெய்வத்திற்கென்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி பிள்ளைகள் சிறப்பாக படிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைக்கும் வீட்டில் அந்த வீட்டு வாரிசுகள் எந்தவித தடைகளும் இல்லாமல் சிறந்த கல்வி அறிவை பெறுவார்கள்.
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் எலுமிச்சம் பழ பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த குலதெய்வ வழிபாட்டை முழுமனதோடு செய்து குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் பிள்ளைகள் அனைத்து விதமான கல்வி அறிவையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.