- Advertisement -
- Advertisement -

தடை நீங்கி திருமண வரம் பெற, மனதிற்கு கிடைத்த நல்ல வரன் அமைய விநாயகர் வழிபாடு மிகவும் நல்ல பலன் தரும். விநாயகர் தடைகளை நீக்குபவர் என்பதால், திருமணத் தடைகளையும் நீக்கி, நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவார் என்பது ஐதீகம். திருமண வரம் தரும் விநாயகர் வழிபாட்டிற்கான சில முக்கியமான குறிப்புகள், மகத்துவம் நிறைந்த திருமண வரம் அருளும் வழிபாடுகள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

பொதுவாக சங்கடங்களை நிவர்த்தி செய்வது, சங்கடஹர சதுர்த்தி வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பு. குறிப்பாக மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மற்றும் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் விநாயகரின் அருளால் திருமண தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வீட்டில் புதன் கிழமையில் திருமணமாகாதவர்கள் ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாலையிலேயே நீராடி சுத்தபத்தமாக மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு, விநாயகரை பூஜையில் வைத்து அருகம்புல் மற்றும் எருக்கம் பூ மாலை கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது. அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை, தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் விநாயகரை அர்ச்சனை செய்யலாம்.

இவற்றில் எது கிடைக்கிறதோ, அதை வைத்து அர்ச்சனை செய்யுங்கள், ஒரு தாம்பூலத்தில் பச்சரிசியை பரப்பி அதன் மீது மஞ்சளை பன்னீர் விட்டு குழைத்து உங்கள் கைகளால் பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிள்ளையாருக்கு நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கல், அவல், கொழுக்கட்டை, பொரி போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை கொண்ட தாம்பூலம் வைக்க வேண்டும்.

- Advertisement -

விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நவக்கிரக தோஷங்களைப் போக்கும் என்பார்கள். இது நவக்கிரக தோஷங்கள் மற்றும் மற்ற கிரக தோஷங்களை நீக்கும் சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. தடைகளை நீக்கும் விநாயகர், இந்த தீப வழிபாட்டின் மூலம் நம் வாழ்வில் உள்ள கிரக ரீதியான தடைகளையும், எதிர்மறை சக்திகளையும் அகற்றுவார் என்பது ஐதீகம். எனவே பூஜையில் விநாயகருக்கு பின்புறமாக ஒரு நெய் தீபத்தை வைத்து ஏற்றுங்கள். அதே போல அகல் விளக்கு ஒன்றை விநாயகருக்கு முன்பு வைத்து, நெய் தீபம் ஏற்றி வையுங்கள். கீழ் வரும் இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். இதனால் திருமண தடைகள் நீங்கி, சீக்கிரமே வரன் கைக்கூடி வரும் என்பது ஐதீகம்.

மந்திரம்:
“ஓம் ஸ்ரீ கணேஷம் விதினேஷம் விவாஹார்தே தே நமஹ”

இதையும் படிக்கலாமே:
11-6-2025 குழந்தைகள் நன்றாக படிக்க தானம்

இந்த மந்திரத்தை உச்சரித்து, மஞ்சள் பிள்ளையாரை தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமை தோறும் ஒன்பது வாரங்கள் இப்படி வழிபட்டு வர, திருமணத்தில் எவ்வளவு தடைகள் இருந்தாலும், அவை நீங்கி கிரஹ தோஷங்கள் நீங்கி விரைவிலேயே உங்கள் மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும் மேலும் புத்திர பாக்கியமும் தடையில்லாமல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -