- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval11-6-2025 குழந்தைகள் நன்றாக படிக்க தானம்

11-6-2025 குழந்தைகள் நன்றாக படிக்க தானம்

- Advertisement -

விசாக நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் முடிந்து விட்டது. நாளை அப்படி என்ன அதிசயம் வாய்ந்த சிறப்பு இருக்கிறது. நம்முடைய குழந்தைகள் இந்த வருடம் படிப்பில் சிறந்து விளங்க, அறிவாற்றலில் மேலோங்கி நிற்க, விரும்பிய படிப்பை படிக்க நாளைய தினம் செய்ய வேண்டிய பரிகாரமும் நாளைய தினத்தைப் பற்றிய சிறப்பையும் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. இந்த வருடத்தின் படிப்பு இப்போதுதான் துவங்கி இருக்கிறது. ஆகவே இந்த காலகட்டத்திற்கு இந்த பரிகாரம் ஒவ்வொரு பெற்றவர்களுக்கும் மிக மிக முக்கியம்.

நாளைய தின சிறப்பை தெரிந்து கொள்வதற்கு முன்பு, இன்று 10-6-2025 முருகப்பெருமானுக்கு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வழிபாடு இருக்கிறது. அது என்ன என்பதை பார்த்து விடுவோம். இன்று செவ்வாய்க்கிழமை, இன்று மாலை 7 மணிக்கு மேலாக கேட்டை நட்சத்திரம் பிறக்கவிருக்கிறது. செவ்வாய்க்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு உங்கள் கையால் 20 ரூபாய்க்கு அரளிப்பூ வாங்கி கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டால், உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வாய்ப்பு உள்ளவர்கள் இன்று இதை செய்து விடுங்கள். இன்று பௌர்ணமி திதியும் இருக்கிறது. ஆக மொத்தம் அம்பாளின் அருளும், முருகப்பெருமானின் அருளும், ஒரு சேர அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். சரி இப்போது அடுத்ததாக பிள்ளைகளுடைய படிப்பிற்காக நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரம்.

கேட்டை நட்சத்திரம் புதன் வழிபாடு

நாளை என்ன சிறப்பு தெரியுமா. புதன் நட்சத்திரமும் கேட்டை நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. புதனுக்குரிய நட்சத்திரம் கேட்டை. புதன் பகவானை வழிபாடு செய்ய அறிவாற்றல் மேலோங்கும். புதன் புத்தி காரகன் அல்லவா. நாளை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் 2 நோட்டு, 2 பேனா, 2 பென்சில், வாங்கி ஒரு ஏழை குழந்தைக்கு உங்கள் கையால் தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

குறைந்தபட்சம் இந்த தானம் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு பொருளாதார வசதி மேலோங்கி இருக்கும் பட்சத்தில் உங்களால் முடிந்த படிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம் அது உங்கள் வசதியை பொறுத்தது.

முடிந்தால் நாளைய தினம் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். நவகிரக சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலில், புதன் பகவானுக்கு 2 மண் அகல் விளக்குகளில், நெய் ஊற்றி தீபம் ஏற்றி இந்த நோட்டு புத்தகத்தை, புதன் பகவான் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பிறகு அந்த நோட்டுப் புத்தகத்தை ஒரு ஏழை குழந்தைக்கு தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். நாளை பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். ஆகவே, பெற்றவர்கள் இந்த பரிகாரத்தை உங்களுடைய பிள்ளைகளுக்காக செய்யலாம். அதி அற்புதமான பலன் நிச்சயம் உண்டு.

- Advertisement -

புதனுக்கு உரிய தானியம் பச்சைபயிறு. 1/2 கிலோ பச்சைபயிறு வாங்கி யாருக்கேனும் தானம் கொடுத்தாலும் சிறப்பு, அல்லது புதன் பகவானுக்கு பச்சை பயிறு தானியத்தில் சுண்டல் செய்து அர்ச்சனை செய்து அந்த சுண்டலை நாலு பேருக்கு தானமாக கொடுங்கள். சிறப்பான பலன் உங்கள் பிள்ளைகளை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: தன ஆகர்ஷணத்தை தரும் ஒரு ரூபாய் பரிகாரம்

இந்த எளிமையான வழிபாட்டை மேற்கொண்டால் பெரிய அளவில் பிள்ளைகளுக்கு கல்வியில் இருக்கும் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்