- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

பக்தனுக்காக திருப்பதி பெருமாளின் திரை தானாக தீப்பற்றி எறிந்த உண்மை சம்பவம்

பொதுவாக திருப்பதி பெருமாளுக்கான ஓய்வு நேரம் வெறும் ஒன்றரை மணி நேரம் தான். ஏகாந்த சேவை முடிந்து நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு திரையிட்டுவிடுவார்கள் அதன் பிறகு அதிகாலை மூன்று மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாளின் துயிலை கலையச்செய்வர். இதுவே தினம் தோறும் அங்கு நடக்கும் நிகழ்வாகும்.

ஒருசமயம் தியாகராஜ ஸ்வாமிகள் பெருமாளை காண திருப்பதி சென்றிருக்கிறார். அவர் தன் உடலை வருத்தி கஷ்டப்பட்டு நடந்தே சென்றிருக்கிறார். ஒருவழியாக அவர் சுவாமியின் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு ஆகிவிட்டது.

- Advertisement -

இவர் சுவாமியின் முன்பு தரிசிக்க செல்லும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள், ஏகாந்த சேவை முடிந்துவிட்டது எல்லாரும் சென்று நாளை வாருங்கள் என்று கூறி திரையை மூடிவிட்டார்களாம். வந்தது தியராஜா சுவாமிகள் என்று அறியாமல் அவர்கள் அப்படி செய்ய, உடனே தியாகராஜ சுவாமிகளின் சீடர்கள் அர்ச்சகர்களிடம் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் சமாதான படுத்திய தியாகராஜ சுவாமிகள் அங்கு அற்புதமான ஒரு பாடலை பாடுகிறார்.

அவ்வளவு தான் ஏழுமலையானுக்கு முன்னாள் இருந்த திரை தகதக வென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்ததாம். பெருமாளின் தரிசனம் அவருக்கு உடனே கிடைக்கிறது. இதை கண்ட அர்ச்சகர்கள் அதிர்ந்து போய், தியாகராஜ சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பிறகு மீண்டு ஏகாந்த சேவையை செய்துவிட்டு திரைபோட்டு சுவாமியை துயில்கொள்ள செய்துள்ளனர்.

உண்மையான பக்தியோடு இறைவனை யார் வணங்கச் சென்றாலும் அவர்களுக்காக அருள்புரிய இறைவன் எந்நேரமும் காத்திருப்பார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு.

- Advertisement -