- Advertisement -

தோல்விகள் வெற்றிகளாக மாற கந்த சஷ்டி வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பல காரியங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அந்த காரியங்களை நாம் செய்யும்பொழுது அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்துதான் செய்வோம். ஆனால் அது பலருக்கும் அவர்கள் நினைத்தது போல் வெற்றியை தராது. எதை செய்தாலும் அதில் ஏதாவது ஒரு தடங்கலோ, தோல்வியோ வந்து கொண்டே இருக்கும். கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். அடமானம் வைத்த நகையை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுவார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வருத்தப்படுவார்கள். இப்படி அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் மகா கந்த சஷ்டி நாளன்று செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டி முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோல்விகள் வெற்றிகளாக மாற கந்த சஷ்டி வழிபாடு

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிரினத்திற்கு கஷ்டங்களை தந்த சூரனை வதம் செய்த நாள்தான் சூரசம்காரம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அன்றைய நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் அவர் அழித்து விடுவார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாது என்று நினைப்பவர்கள் இன்றைய தினம் இரவு 12 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி இந்த மந்திரத்தை கூறினால் போதும். அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

- Advertisement -

மகா கந்தசஷ்டி நாள் அன்று காலையிலிருந்து இரவு 12 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையை தான் பயன்படுத்த வேண்டும். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மிளகை போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தரையில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து வலது உள்ளங்கையில் இரண்டு மிளகை வைத்துக்கொண்டு கீழ் வரும் இந்த மந்திரத்தை 111 முறை கூற வேண்டும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஐம் க்லௌம் அதிசய காரிய சித்தியை நமோ நமஹ.

- Advertisement -

இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய மிளகை அந்த டம்ளரில் போட்டு விட வேண்டும். குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து 20 நிமிடம் வரை அந்த மிளகு தண்ணீரிலேயே இருக்கட்டும். பிறகு அந்த தண்ணீரை குடித்துவிட்டு மிளகை சாப்பிட்டு விட வேண்டும். தீபம் எரிந்து முடித்த பிறகு தாம்பாளத்தில் வைத்திருந்த மிளகை ஒரு மூட்டையாக கட்டி நிலைவாசலை வலது புறமாக மூன்று முறையும், இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று கற்பூரத்தை வைத்து எரித்து விட வேண்டும்.

இந்த முறையில் தீபம் ஏற்றி மந்திரம் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் படிப்படியாக நீங்கும். கொடுத்த பணம் கிடைக்கும். நாம் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பணவரவு உண்டாகும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்ப முடியும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:மறுபிறவி இருப்பது உண்மையா?

இந்த எளிமையான மிளகு வழிபாட்டை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி நாளன்று செய்பவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் முருகனின் அருளால் வெற்றிகரமாக நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -