- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமறுபிறவி இருப்பது உண்மையா?

மறுபிறவி இருப்பது உண்மையா?

- Advertisement -

இவ்வுலகில் பல விசித்திரமான மர்மம் நிறைந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதால் தான் மனிதன் தொடர்ந்து பாவங்களை செய்து கொண்டிருக்கிறான். ஆத்மா அழியாதது என்று இந்து சமயம் ஆணித்தரமாக கூறுகிறது. மனித உடம்பிற்கு மட்டுமே அழிவு உண்டு. ஆனால் உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு புது புது உடல்கள் தேவைப்படுகிறது. ஆத்மா ஏன் அழிவதில்லை? ஆத்மா ஏன் மறுபிறவி எடுக்கிறது? என்னும் கேள்விகளுக்கான சிறு அலசலை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

ஆத்மா என்பது அழியாதது என்றால் உடல் மட்டும் ஏன் அழிந்து விடுகிறது? ஆத்மா மோட்சம் அல்லது முக்தி அடையும் வரை அதற்கு வெவ்வேறு உடல்கள் தேவைப்படுகின்றன. கர்ம வினைகளை முடித்து இறைவனை சரணாகதி அடையும் வரை ஒரு ஆத்மாவிற்கு அழிவு என்பது கிடையாது. ஒவ்வொரு பிறவி எடுக்கும் பொழுது ஒவ்வொரு நிலையை மனதால் உணர்ந்து அடைந்து கொண்டே வருகிறான். இறுதியில் ஆத்மா இறைவனின் திருவடியை அடையும் பொழுது அத்துடன் ஆத்மாவிற்கு முக்தி கிடைக்கிறது.

- Advertisement -

நீங்கள் ஆய்வு செய்து பார்த்தால் ஒரு மனிதன் மறுபிறவி எடுக்கிறான் என்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நம்ப முடியாத நிகழ்வுகள் நம் கண் முன்னே நடந்தேறி இருக்கிறது. இதற்கு சிறந்த ஒரு சான்றாக இந்தியாவின் டெல்லியில் 1926ஆம் ஆண்டு பிறந்த ஒரு சிறுமிக்கு தன் முந்தைய பிறவி மறக்காமல் அப்படியே ஞாபகம் இருந்ததாம். தன்னுடைய பெயர், ஊர், உறவினர்கள் என்று அனைத்தையும் கூறி தன் பெற்றோர்கள் நீங்கள் அல்ல.. என்றும் கூறியிருக்கிறார். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று பயந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து ஒரே விஷயத்தை பற்றி அந்த சிறுமி புலம்பியதால், உண்மை அறிய அவள் கூறிய இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான் சிறுமி கூறிய அனைத்தும் உண்மை என அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

சிறுமி தான் வாழ்ந்த இடம், கணவர், குழந்தைகள், உற்றார், உறவினர்கள், வீடு, வீட்டில் இருக்கும் பொருட்கள் என்று அனைத்தையும் நினைவுபடுத்தி கூறியிருக்கிறாள். இது உண்மைதானா? என்று ஆய்வும் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகையே அதிர வைத்த இந்த நிகழ்வு குறித்து மகாத்மா காந்தி அடிகளுக்கு தெரிய வரவே, அவரும் இந்த சிறுமையை சந்தித்து இருப்பதாக வரலாறு கூறுகிறது. இந்நிகழ்வு மட்டுமல்லாமல் இது போன்ற பல நிகழ்வுகள் உலகம் முழுவதிலும் இருந்து மர்மமாக நாம் கேள்விப்பட்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

- Advertisement -

மறுபிறவி என்பது அந்த ஆத்மா அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கான ஒரு திறவுகோல் ஆகும். நம்முடைய சில நடவடிக்கைகளை வைத்து நாம் முன் ஜென்ம பிறவியா? அல்லது புது பிறவியா? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல பிறவிகள் எடுத்தவர்கள் ரொம்பவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இவர்களுக்கு இருக்கும். ஒருவருடன் புதிதாக உரையாடும் பொழுது, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை கணித்து கூறி விடுவார்கள். அடிக்கடி ஒரே மாதிரியான கனவுகள் வரும். பிறக்கும் பொழுதே சிறு குழந்தைகள் போல் நடந்து கொள்ளாமல், அதிக அறிவுடன் காணப்படுவார்கள். பெரிய மனிதர்களைப் போல பேசுவதும், பெரிய மனிதர்களுடன் நிறைய உரையாடுவதை விரும்புவதும் செய்வார்கள்.

இதையும் படிக்கலாமே:
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

ஏற்கனவே நடந்த ஒன்று திரும்பவும் நடப்பதாக உள்ளுணர்வு ஏற்படும். முதிர்ந்த ஆத்மாக்கள் மற்றவர்களின் உணர்வுகளையும், வலிகளையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். சுய பரிசோதனை செய்து கொள்வார்கள். இயற்கையுடன் ஒன்றிணைவார்கள். இன்னும் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். நாம் தெய்வீக நிலையை அடையும் வரை நாம் செய்த பாவங்களுக்கான கர்ம வினைகளை அனுபவித்து கொண்டே, அடுத்தடுத்த பிறவிகளையும் எடுக்கிறோம். உணர்வுபூர்வமாக நாம் மறுபிறவி எடுத்து இருக்கிறோமா? என்று மனதை ஒருமுகப்படுத்தி தியான நிலையில் சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கே சில விஷயங்கள் புரியும்.

சற்று முன்