- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

திருப்பதி கோவில் பணக்கார கோவிலாக மாறியதன் ரகசியம் தெரியுமா ? | Tirupati

9000 கிலோ தங்கம் இருப்பு, வருடத்திற்கு1,000 முதல் 1,200 கோடி ரூபாய் வருமானம், தேசிய மற்றும் பல்வேறு உலக வங்கியில் 12,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு, அந்த வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டில் இருந்து வரும் வட்டி வருமானம் மட்டுமே 850 கோடி ரூபாய் இவையெல்லாவற்றிற்கும் அதிபதியாக இருப்பவர் கலியுக தெய்வமான திருப்பதி திருமலை “வெங்கடாசலபதி” ஆவார். விஷ்ணுவின் அம்சமான இந்த வெங்கடாசலபதி பல்லாயிரம் ஆண்டுகளாக திருப்பதி மலை மீது வீற்றிருந்தவாறு, வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்து அருள் புரிகிறார். அப்படியான அந்தத் திருமலைவாசன் மற்றும் அவரின் திருப்பதி திருமலை கோயில் உலகின் சிறந்த இடமாக மாறியது எப்படி என்பது குறித்த இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பர்ட்ன் ஸ்டெய்ன் எனப்படும் மேலைநாட்டு அறிஞர் பல ஆண்டுகள் இந்திய கோயில்கள் பற்றி ஆய்வில் ஈடுபட்டு, தனது அறிக்கையை வெளியிட்டார். அதில் திருப்பதி கோயில் மிகவும் செல்வமும், புகழும் பெறுவதற்கு முக்கிய காரணம் விஜயநகரப் பேரரசர்கள் என குறிப்பிட்டுள்ளார். விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் குறிப்பாக கிருஷ்ணதேவ ராயர் முதல் அச்சுததேவராயர் ஆட்சிக்காலம் வரையும் பிறகு சதாசிவ தேவ ராயர் ஆட்சிக் காலத்திலும் விஜயநகர அரசர்கள் திருப்பதி கோயிலின் நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், கோயிலின் செல்வம் சொத்துக்களில் மிகுந்த அக்கறை செலுத்தி முறையாக நிர்வகித்து, அதன் பொருளாதார நிலையை நன்கு மேம்படுத்தினர்.

- Advertisement -

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் இவ்வளவு செல்வம் மிகுந்த கோயிலாக மாறியதற்கு இரண்டு முக்கிய காரணங்களை மேலைநாட்டு அறிஞர் குறிப்பிடுகிறார். முதலாவது கோயிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் நிலம் சார்ந்த சொத்துக்கள். இரண்டாவது கோயிலுக்கு பக்தர்கள் தருகின்ற காணிக்கைகள் மற்றும் தானங்கள்.

கோயிலுக்கு நிலம் சார்ந்த சொத்துக்கள் பல கோயில் நிர்வாகத்தினரால் நிர்வகிக்கப்பட்டன. மற்றொரு முறையில் கோவில் நிலங்களில் பிறர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு உற்பத்தியாகின்ற தானியங்களில் பெரும் பகுதியை கோயிலுக்கு தந்த முறையிலும் திருப்பதி கோவிலுக்கு மிகுந்த லாபங்கள் கிடைத்தன. விஜயநகர பேரரசின் சிறந்த மன்னரான கிருஷ்ணதேவராயரின் 40 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், கிராமங்கள் திருப்பதி கோயிலுக்கு சொத்துக்களாக அளிக்கப்பட்டன.

- Advertisement -

கோயிலுக்கு பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கைகள், தானங்கள் பெரும்பாலானவை கோயிலில் மக்களின் நன்மைக்காக செய்யப்பட்ட பூஜைகள், யாகங்களுக்கு தரப்பட்டவையாகவே இருந்தன. இப்படி பெறப்படும் செல்வம் கோயிலின் சீர்திருத்தம் மற்றும் நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

மேலும் திருப்பதி கோவிலில் சார்ந்த சொத்துக்கள் வியாபரங்கள் போன்றவற்றில் கோயில் நிர்வாகக் குழுவினர், வியாபாரிகள் மற்றும் இதர செல்வந்தர்கள் போன்றோர் முதலீடு செய்ததால் திருப்பதி கோவிலின் சொத்து குறுகிய காலத்தில் பன்மடங்கு அதிகரித்தது. அப்போதைய பக்தர்கள் அளித்த செல்வம் மற்றும் இதர காணிக்கைகளின் அளவு அக்காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு வழங்கிய காணிக்கைகள், தானங்களை விட பல மடங்கு அதிகமாகவே இருந்தது. குறிப்பாக 1542 ஆண்டு முதல் 1568 ஆண்டு காலம் வரை பக்தர்கள் வியாபாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் திருப்பதி கோவிலுக்கு அளித்த தானங்கள், காணிக்கைகள் அரசர்கள் கோயிலுக்கு வழங்கிய தானங்களை விட 8 மடங்கு அதிகமாக இருந்தது.

- Advertisement -

அரசர்கள் திருப்பதி கோவிலை ஒரு புகழ்பெற்ற ஆன்மிக தலமாக மாற்றினார்கள். அதே நேரம் பக்தர்கள், வியாபாரிகள் அக்கோவிலை பொருள் வளம் மிக்க ஆன்மீக தலமாக வலுப்படுத்தினார். அதே போன்று கோவிலில் பக்தர்களுக்கு தரப்படும் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனை போன்றவற்றில் வியாபாரிகள் லாபம் பெற்று, மீண்டும் கோயிலிலேயே தங்கள் லாபங்களை முதலீடு செய்தனர். திருப்பதி கோயில் பக்தர்களின் வருகை அதிகரித்து அக்காலத்திலேயே அதிக மக்களால் வழிபடப் பெறும் ஒரு கோவிலாக புகழ் பெற்றது

அது போக கோயிலின் பிரசாதத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததும், அந்த பிரசாதம் தயாரிப்பு விற்பனை போன்றவற்றில் கோயிலைச் சுற்றியிருந்த கிராமத்தினர், பக்தர்கள் போன்றவர்கள் அதிகம் ஈடுபட்டனர். இதுவும் திருப்பதி கோவிலின் செல்வ வளமைக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆகவே இந்த வழியில் பக்தர்களின் காணிக்கை, கோயில் நிர்வாகத்தினர், கோயிலைச் சார்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், சுற்றியிருந்த கிராம மக்களின் உழைப்பு மற்றும் முதலீடு மற்றும் கோவில் நிர்வாகத்தின் சிறந்த செல்வ வள மேலாண்மை ஆகிய காரணங்களால் திருப்பதி கோவில் அக்காலத்திலேயே செல்வ வளம் மிகுந்த ஒரு கோவிலாக மாறி தேசிய அளவில் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கியது.

ஆனால் நான்கு நூற்றாண்டுகள் கடந்து தற்போது திருப்பதி கோயிலின் நிலையை ஆராய்ந்து பார்த்தோமென்றால் அரசர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கியதை பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டிருப்பதையும், கோயிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் யார் யாருக்கோ கொடுக்கப்பட்டு, அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் அழிக்கப்பட்டிருப்பதும், கோயிலின் நிதி நிர்வாகத்தில் முறைகேடு, கோவிலுக்கு சொந்தமான நகைகள் இதர சொத்துக்கள் திருடு போதல் போன்ற இழிவான செயல்கள் அரங்கேறுவதை பக்தர்கள் வேதனையுடன் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
நோய்கள் விரைவில் குணமாக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati temple secret in Tamil. It is also called as Tirupati tirumala venkatesa in Tamil or Vijayanagara perarasu in Tamil or Tirupati kovil sothugal in Tamil or Tirupati venkatachalapathy in Tamil.

- Advertisement -