நோய்கள் விரைவில் குணமாக, லட்சுமி கடாட்சம் ஏற்பட இதை செய்யுங்கள்

nellikai
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிற ஒரு புகழ்பெற்ற தமிழ் பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். அக்காலத்தில் நமது முன்னோர்கள் பதற்றம் இல்லாத வாழ்க்கை முறையை மேற்கொண்டதால் சிறிய அளவிலான நோய் பாதிப்புகள் கூட ஏற்படாமல் மிக நீண்ட காலம் வாழ்ந்தனர். தற்காலங்களில் பணம் ஈட்டுவது ஒன்று மட்டுமே அனைவரின் இலட்சியமாக இருப்பதால், தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் பிற்காலத்தில் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு மிகவும் வருந்துகின்றனர். இப்படி நெடு நாட்களாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் வேதனை தீர ஒரு எளிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

Pooja room

நோய்கள் வந்த பிறகு அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட, நோய்களே ஏற்படாமல் தடுத்துக் கொள்வதே சிறந்த வழிமுறையாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான மருந்துகளை உட்கொள்வதோடு இறை வழிபாடு செய்வது உடலிலும், மனதிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி சீக்கிரம் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வம் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். தினமும் காலையில் எழுந்ததும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால், உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். மேலும் பூஜை அறையில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படம் அல்லது சிறிய அளவிலான விக்கிரகத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் அந்த மலை நெல்லிக்காயை தெய்வ பிரசாதமாக சாப்பிட்டு வரவேண்டும்.

Nellikai benefits in tamil

நெல்லிக்காய் என்பது இயற்கையிலேயே ஒரு மருத்துவ குணம் மிக்க ஒரு காய் மட்டும் கனி வகையாக இருக்கிறது. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும் போதே இந்த நெல்லிக்காய் லட்சுமி தேவிக்குரிய ஒரு நைவேத்திய பொருளாக இருக்கிறது. எனவே தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் செய்து வழிபட்ட பிறகு, அந்த நெல்லிக்காயை தெய்வ பிரசாதமாக சாப்பிட்டு வருவதால் உங்கள் இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைத்து, உங்களின் நோய்கள் சீக்கிரம் குணமடைகிறது. லட்சுமிதேவியின் அருள் ஆசிகளும் உங்களுக்கு கிடைக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for health in Tamil. It is also called as Udal nalam pera in Tamil or Noigal theera valipadu in Tamil or Lakshmi devi in Tamil or Udal arokiyam pera in Tamil.

- Advertisement -