- Advertisement -

மேஷம்:

சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு வகையில் அனுகூலம் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி சாதகமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:

மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்:

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கன்னி:

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திரம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். தேவையான பணம் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.

தனுசு:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

மகரம்:

புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by