- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கண்மூடித்தனமான விஷயங்களை செய்யாதீர்கள். குடும்பத்தில் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது. சிலர் கடல் தாண்டி பயணம் செய்ய வாய்ப்பு உண்டு. பொருளாதார ரீதியான சிக்கல்களை எளிதாக சமாளிப்பீர்கள். எண்ணிய எண்ணம் ஈடேற விவேகம் தேவை.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அகம்பாவம் குறைப்பது நல்லது. எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய நெருக்கம் குறையும். சுற்றத்தாரின் நட்பு வட்டம் விரிவடையும். தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொல்லை விட செயலில் நீங்கள் செய்ய நினைத்ததை செய்வது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் வலுவாகும் வாய்ப்பு உண்டு. பணரீதியான விஷயத்தில் அதிர்ஷ்டம் வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நன்மை தரும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய ஆற்றலை சரிவர பயன்படுத்திவீர்கள். மற்றவர்களுக்காக இரக்க குணம் கொண்ட நீங்கள் உதவிகளை செய்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மன கசப்புகள் மாறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத இடங்களுக்கு செல்ல வேண்டிய அமைப்பாக இருக்கிறது. பயணங்கள் மூலம் அனுகூல பலன் தரலாம். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நிகழலாம். அரசு வழி காரியங்களில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இயலாமையை மற்றவர்களுக்கு காண்பிக்காதீர்கள். மனோ தைரியத்துடன் என்னால் எதுவும் முடியும் என்கிற நம்பிக்கை தேவை. தக்க சமயத்தில் சகோதரர்களுடைய உதவிகள் கிடைக்கும். பணத்திற்காக சில இடங்களில் அலைய வேண்டி வரலாம். உற்ற நண்பர்களே எதிரியாக இருக்க வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது எனினும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். சுப காரிய பேச்சுகளில் தொடர் தடைகள் நீடிக்கலாம். கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார சிக்கல்களை சமாளிக்க சிரமப்படுவீர்கள். வரவுக்குள் செலவுகள் செய்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்களிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. கையில் அதிகம் பணம் புழங்கும் எனினும் அனாவசிய செலவுகள் வரலாம் எச்சரிக்கை வேண்டும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் அதிகம் இருக்கும். ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. வீண் பகையை தவிர்க்கவும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். வயதில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்புகளை பெறுவீர்கள். சுய உழைப்பால் முன்னேறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கு நல்ல நாளாக இருக்கிறது. இறைவழிபாடுகளின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து விடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து சில மன சங்கடங்கள் வரக்கூடும் கவனம் வேண்டும். உடல் நலம் மேம்படும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் மற்ற அமைப்பு என்பதால் கவனமுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. பயணங்களின் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தும் பயனில்லாமல் போகலாம் விழிப்புணர்வு வேண்டும். சுற்றி இருக்கும் சூழ்ச்சிகளை புத்தியால் வெல்வீர்கள்.

- Advertisement -