- Advertisement -

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கடகம்:

தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். குடும்பத்தை முன்னிட்டு அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி வரும். உற்சாகமான நாள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

பிள்ளைகள் வழியில் பெருமைப்படக்கூடிய சம்பவம் நிகழும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். இன்று பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக அவசியம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கன்னி:

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்:

வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

விருச்சிகம்:

மனதில் உற்சாகம் பெருகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உற்சாகமான நாள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

மகரம்:

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்:

சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். வேலையின் காரணமாக இன்று திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

வாழ்க்கைத்துணை வழியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். வீண் அலைச்சல் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -