- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (09/06/2019): தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்

மேஷம்:

தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

ரிஷபம்:

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பேசும்போது உஷாராக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி:

இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தனுசு:

அலுவலகத்தில் பணிச் சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரத்தில் நேற்றைய விட இன்று லாபம் அதிகமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இன்று மகிச்சியாக இருப்பிர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மகரம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பேசும்போது பதற்றம் வேண்டாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:

பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by